புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம் அமைச்சகம்
2022-23, 2023-24 மற்றும் 2024-25 நிதியாண்டுகளுக்கான மாநில உள்நாட்டு உற்பத்தியின் ஒப்பீட்டு மதிப்பீடுகள் குறித்த வருடாந்திர கூட்டு விவாதங்கள்
இடுகை இடப்பட்ட நாள்:
19 MAY 2026 5:22PM by PIB Chennai
மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் தேசிய புள்ளியியல் அலுவலகத்தின் தேசிய கணக்குகள் பிரிவு, மாநில உள்நாட்டு உற்பத்தியின் (எஸ். டி. பி) மதிப்பீடுகளின் ஒப்பீட்டு மதிப்பீடுகள் குறித்த வருடாந்திர கூட்டு விவாதங்களை ஒவ்வொரு ஆண்டும் தேசிய கணக்கு பிரிவு (என். ஏ. டி) மற்றும் மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களின் பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் இயக்குநரகங்கள் (டி. இ. எஸ்) அதிகாரிகளுக்கு இடையே ஏற்பாடு செய்கிறது. மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் மற்றும் என்ஏடி, என்எஸ்ஓ ஆகியவற்றால் தனியாகத் தொகுக்கப்பட்ட எஸ். டி. பி மதிப்பீடுகளில் உள்ள வேறுபாடுகளை சரிசெய்வதை இந்த விவாதங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளன.
இந்த ஆண்டு, பல்வேறு மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களின் என்ஏடி மற்றும் டிஇஎஸ் அதிகாரிகளுக்கிடையேயான கூட்டு விவாதங்கள் 2026 மே 20 முதல் 2026 ஜூன் 19 வரை புதுதில்லியில் உள்ள குர்ஷித் லால் பவனில் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தப் பயிற்சி ஒவ்வொரு வாரமும் மூன்று நாட்கள் காலத்துடன் மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களின் குழுவை உள்ளடக்கிய நான்கு வாரங்களில் தனித்தனியாக நடத்தப்படும்.
முதல் சுற்று பேச்சுவார்த்தை 2026 மே 20 முதல் 22 வரையிலும், இரண்டாவது சுற்று 2026 ஜூன் 03 முதல் 05 வரையிலும், மூன்றாவது சுற்று 2026 ஜூன் 10 முதல் 12 வரையிலும், கடைசி அல்லது நான்காவது சுற்று 2026 ஜூன் 17 முதல் 19 வரையிலும் நடைபெறும்.
திருத்தப்பட்ட அடிப்படை ஆண்டு 2022-23-ன் அடிப்படையில் 2022-23,2023-24 மற்றும் 2024-25 ஆண்டுகளுக்கான தற்போதைய விலை ஜி. எஸ். டி. பி மதிப்பீடுகள் குறித்து விவாதங்கள் கவனம் செலுத்தும். சம்பந்தப்பட்ட மாநில/யூனியன் பிரதேச அதிகாரிகளுடன் நெருக்கமான ஒருங்கிணைப்பில் மாநில மொத்த உற்பத்தி மதிப்பீடுகளை தொகுப்பதற்காக பின்பற்றப்பட்ட திருத்தப்பட்ட முறைகள் மற்றும் தரவு ஆதாரங்கள் குறித்து துறைக் குழுக்கள் விவாதிக்கும். பரிந்துரைக்கப்பட்ட திருத்தங்கள் குறித்த முடிவுகளை இறுதி செய்வதற்காக அந்தந்த டிஇஎஸ் -களின் மூத்த அதிகாரிகளும் நிறைவு அமர்வுகளில் பங்கேற்பார்கள்.
இந்த விவாதங்களிலிருந்து வெளிவரும் ஒப்பிடத்தக்க எஸ். டி. பி மதிப்பீடுகள் தேசிய நிதி திட்டமிடலுக்கான முக்கியமான உள்ளீடுகளாகும், மேலும் அவை முறையே நிதி ஆணையம், செலவினத் துறை (DoE) நிதி அமைச்சகம், தலைமை தணிக்கை மட்டும் கட்டுப்பாட்டு அதிகாரி (CAG) மற்றும் பிற நிறுவனங்களால் விரிவாகப் பயன்படுத்தப்படுகின்றன.
(Release ID: 2262865)
****
TV/PKV/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2263044)
வருகையாளர் எண்ணிக்கை : 7