ரெயில்வே அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஜம்மு – ஸ்ரீ மாதா வைஷ்ணவ் தேவி கத்ரா பிரிவில் ரூ.238 கோடி செலவில் சுரங்கப்பாதை புனரமைப்பு உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள இந்திய ரயில்வே ஒப்புதல் அளித்துள்ளது

இடுகை இடப்பட்ட நாள்: 19 MAY 2026 11:36AM by PIB Chennai

வடக்கு ரயில்வேயின் ஜம்மு – ஸ்ரீ மாதா வைஷ்ணவ் தேவி கத்ரா பிரிவில் ரூ.238 கோடி செலவில் சுரங்கப்பாதை புனரமைப்பு, பாலங்கள் பாதுகாப்புப் பணிகள்  உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள இந்திய ரயில்வே ஒப்புதல் அளித்துள்ளது.   இப்பணிகளில் ஜம்மு - ஸ்ரீ மாதா வைஷ்ணவ் தேவி கத்ரா வழித்தடத்தில் உள்ள  சுரங்கப்பாதைகளில் கசிவுப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணுதல், புனரமைப்பு நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் ஆகியவையும் அடங்கும்.

இது குறித்து கருத்துத் தெரிவித்துள்ள ரயில்வே அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ், நாட்டில் அதிக சவாலான நிலப்பரப்புகளில் பாதுகாப்பான மற்றும் நம்பகமான போக்குவரத்தை உறுதி செய்வதில் அரசு மேற்கொண்டுள்ள அர்ப்பணிப்பை இப்பணிகள் பிரதிபலிப்பதாகக் கூறியுள்ளார்.

பாலங்கள் மற்றும் சுரங்கப்பாதைகளில் விரிவான மதிப்பீடு மேற்கொண்டதன் அடிப்படையில், பாதுகாப்பு மற்றும் புனரமைப்புப்  பணிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இப்பணிகள், இந்த முக்கிய வழித்தடத்தில் நீண்டகால பாதுகாப்பையும், நம்பகத்தன்மையையும்  வலுப்படுத்தும் என்று அவர் தெரிவித்துள்ளார்.   

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2262634&reg=3&lang=1

***

SS/IR/KPG/KR


(வெளியீட்டு அடையாள எண்: 2262716) வருகையாளர் எண்ணிக்கை : 11
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Gujarati , Telugu , Kannada