பிரதமர் அலுவலகம்
பல்வேறு தரப்பு மக்களை ஒரே வீட்டின் உறுப்பினர்களாக பூமித்தாய் கருதுவது குறித்த சமஸ்கிருத சுபாஷிதத்தை பிரதமர் பகிர்ந்துள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
19 MAY 2026 9:05AM by PIB Chennai
அனைத்து மனித சமூகத்தையும் பூமித்தாய் ஒரே குடும்பமாக கருதுவது குறித்த சமஸ்கிருத சுபாஷிதத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று ( 19.05.2026) பகிர்ந்துள்ளார்.
பூமித்தாயைப் பொறுத்தவரை முழு உலகமும் ஒரு வீடு போன்றதாகும். அங்கு ஒவ்வொரு கலாச்சாரத்திற்கும் முக்கியத்துவமும், கண்ணியமும் உள்ளதாக திரு மோடி எடுத்துரைத்துள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது:
“பல்வேறு மொழிகளைப் பேசும் மக்களையும் பல்வேறு மதங்கள் மற்றும் பாரம்பரியங்களைப் பின்பற்றுவோரையும் ஒரே வீட்டின் உறுப்பினர்களாக பூமித்தாய் அரவணைக்கிறது. அமைதியையும், பாச உணர்வையும் கொண்டுள்ள பசு பால் தருவது போல், இந்தப்பூமி ஆயிரக்கணக்கான வளங்களை வழங்கட்டும்.”
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2262599®=3&lang=1
***
SS/IR/KPG/KR
(வெளியீட்டு அடையாள எண்: 2262681)
வருகையாளர் எண்ணிக்கை : 64
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Bengali-TR
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam