கப்பல் போக்குவரத்து அமைச்சகம்
தேசிய நீர் மெட்ரோ கொள்கை வரைவை மத்திய அரசு வெளியிட்டுள்ளது - மத்திய அமைச்சர் திரு சர்பானந்த சோனோவால்
இடுகை இடப்பட்ட நாள்:
18 MAY 2026 8:50PM by PIB Chennai
நாட்டில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் நீர் மெட்ரோ சேவைகளைத் தொடங்குவது குறித்த ஆய்வுக் கூட்டம், மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து, நீர்வழிப் போக்குவரத்துத் துறை அமைச்சர் சர்பானந்த சோனோவால் தலைமையில் இன்று (18.05.2026) நடைபெற்றது. 18 நகரங்களில் வாட்டர் மெட்ரோ எனப்படும் நீர் மெட்ரோ சேவைகளைத் தொடங்குவதற்கான திட்டங்களை மத்திய அரசு முன்வைத்துள்ளது என்றும், முதற்கட்டமாக குவஹாத்தி உட்பட பல நகரங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன என்றும் மத்திய அமைச்சர் சர்பானந்த சோனோவால் அப்போது தெரிவித்தார்.
ஸ்ரீநகர், பாட்னா, வாரணாசி, அயோத்யா, பிரயாக்ராஜ் உள்ளிட்ட நகரங்களும் முதல் கட்டத்தில் இடம்பெற்றுள்ளன என்று அவர் கூறினார். அதே நேரத்தில் அசாமில் உள்ள தேஜ்பூர், திப்ருகர் ஆகியவை இத்திட்டத்தின் இரண்டாம் கட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். அமைச்சகம் ஒரே நேரத்தில் 2026-ம் ஆண்டின் தேசிய நீர் மெட்ரோ கொள்கையின் வரைவை அமைச்சகங்களுக்கு இடையேயான ஆலோசனைகளுக்காக வெளியிட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார். இந்தியாவின் அடுத்தகட்ட போக்குவரத்துப் புரட்சியை முன்னெடுத்துச் செல்வதில் இத்திட்டம் முக்கியப் பங்கு வகிக்கும் என்று திரு சர்பானந்த சோனோவால் கூறினார்.
கொச்சி வாட்டர் மெட்ரோவின் வெற்றி, அதிலிருந்து கற்றுக்கொண்ட பாடங்களின் அடிப்படையில், தற்போது, கப்பல் போக்குவரத்துக்கான நீர்வழிகளைக் கொண்ட நகரங்களில் நீர் சார்ந்த நகர்ப்புறப் போக்குவரத்துத் தீர்வுகளை அறிமுகப்படுத்துவதற்கான ஒரு தேசியக் கட்டமைப்பை அரசு விரிவுபடுத்தி வருகிறது. முன்மொழியப்பட்ட இந்தத் திட்டமானது, உள்நாட்டு நீர்வழிகளைத் திறமையான, நீடித்த, நவீன பொதுப் போக்குவரத்து வழித்தடங்களாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2262535®=3&lang=1
(Release ID: 2262535)
****
TV/PLM/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2262561)
வருகையாளர் எண்ணிக்கை : 12