விவசாயத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

எரிசக்தி சிக்கனம் தொடர்பாக வேளாண் அமைச்சகம் முக்கிய முடிவுகள் - மத்திய அமைச்சர் திரு சிவராஜ் சிங் சௌகான் அறிவிப்பு

இடுகை இடப்பட்ட நாள்: 18 MAY 2026 7:16PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடியின் சிக்கனம், வளப் பாதுகாப்பு, தற்சார்பு ஆகியவற்றுக்கான வேண்டுகோளுக்கு ஏற்ப, மத்திய வேளாண்துறை அமைச்சர் திரு சிவராஜ் சிங் சௌகான், துறை சார்ந்து, இன்று (18.05.2026) சில முக்கிய முடிவுகளை அறிவித்தார். அதிகாரிகளுடனான ஆய்வுக் கூட்டத்தில், எரிபொருள் சிக்கனம், மின்சார சிக்கனம், இணையவழிப் பணி அரசுச் செலவினங்களைக் குறைத்தல் ஆகியவற்றுக்கான நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டு முடிவுகள் எடுக்கப்பட்டன.  சிறப்பு குடும்பச் சூழ்நிலைகளைத் தவிர, ஓராண்டுக்குத் தங்கம் வாங்குவதில்லை என அதிகாரிகள் கூட்டாக உறுதிமொழி எடுத்தனர். இதை, பிரதமர் திரு நரேந்திர மோடியின் வேண்டுகோளுக்கு இணங்க தனிப்பட்ட கட்டுப்பாட்டைக் கடைப்பிடிப்பதற்கான ஒரு உதாரணமாக திரு சிவராஜ் சிங் சௌகான் குறிப்பிட்டார்.

 

நிர்வாக நிலையில், குவஹாத்தி, விசாகப்பட்டினம் ஆகிய இடங்களில் நடைபெறவிருந்த இரண்டு மண்டல மாநாடுகள் நேரடி முறையில் நடத்தப்படாது என்றும், அதற்குப் பதிலாக இணையவழியில் நடத்தப்படும் என்றும் முடிவு செய்யப்பட்டது.

 

அலுவலகங்களில் எரிசக்தி சேமிப்பிற்கும் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. மத்திய அமைச்சர் திரு சிவராஜ் சிங் சௌஹான், தேவைப்படாதபோது விளக்குகள், மின்விசிறிகள், குளிரூட்டிகள், கணினிகள், பிற உபகரணங்களை அணைத்து வைக்குமாறு கேட்டுக்கொண்டார்.

 

கூட்டத்தில், சுமார் 20% ஊழியர்கள் சுழற்சி முறையில் வீட்டிலிருந்து பணிபுரிய அனுமதிக்கப்படுவார்கள் என முடிவு செய்யப்பட்டது.  வீட்டிலிருந்து பணிபுரியும் ஊழியர்கள் தொலைபேசி, மின்னஞ்சல், காணொலிக் காட்சிக் கலந்துரையாடல் வழியாகத் தொடர்பில் இருப்பார்கள்.

 

 

எரிபொருளைச் சேமிக்கவும், பொது வளங்களைச் சிறந்த முறையில் பயன்படுத்தவும், வாரத்திற்கு ஒருமுறை கார் பகிர்வு முறையைச் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் திரு சிவராஜ் சிங் தெரிவித்தார். இந்த முறை இயக்குநர் நிலைக்கும் விரிவுபடுத்தப்படும். அதேவேளையில், வாகனப் பயன்பாட்டை ஏறக்குறைய மூன்றில் ஒரு பங்கு குறைப்பதன் மூலம் எரிபொருள், வாகனப் பராமரிப்பு, ஓட்டுநர் மேலாண்மை, அது தொடர்பான பிற செலவுகளையும் குறைப்பதை அமைச்சகம் நோக்கமாகக் கொண்டுள்ளது என்று அமைச்சர் கூறினார். தற்போதைய உலகளாவிய சூழ்நிலையில், சிறிய முயற்சிகள் கூட பெரிய அளவில் நல்ல விளைவுகளைத் தரும் என்று மத்திய வேளாண்துறை அமைச்சர் திரு சிவராஜ் சிங் சௌகான் குறிப்பிட்டார்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2262471&reg=3&lang=1

(Release ID: 2262471)

****

TV/PLM/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2262506) வருகையாளர் எண்ணிக்கை : 12
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Gujarati