விவசாயத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கிழக்குப் பிராந்திய வேளாண் மாநாடு புவனேஷ்வரில் நடைபெற உள்ளது

இடுகை இடப்பட்ட நாள்: 18 MAY 2026 4:15PM by PIB Chennai

ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் கிழக்குப் பிராந்திய வேளாண் மாநாடு 2026 மே 19 அன்று நடைபெற உள்ளது. மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம் இதற்கு ஏற்பாடு செய்துள்ளது.

மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் திரு சிவ்ராஜ் சிங் சௌஹான் இம்மாநாட்டிற்கு தலைமை வகிக்கிறார்.

ஒடிசா முதலமைச்சர் திரு மோகன் சரண் மாஜி, பல்வேறு மாநிலங்களின் வேளாண் அமைச்சர்கள் மற்றும் உயரதிகாரிகள், விஞ்ஞானிகள், விவசாயப் பிரதிநிதிகள், வேளாண் நிபுணர்கள், புத்தொழில் நிறுவனங்கள், வங்கிகள் ஆகியவற்றின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.

மத்திய - மாநில அரசுகளுக்கிடையே ஒருங்கிணைப்பை வலுப்படுத்துவதும், விவசாயிகளின் வருவாயை அதிகரிப்பதும், வேளாண் துறையின் ஒட்டுமொத்த வளர்ச்சியை மேம்படுத்துவதும் இம்மாநாட்டின் நோக்கமாகும்.

இம்மாநாட்டில் வேளாண் மற்றும் விவசாயிகள் நலன் அமைச்சகத்தின் பல்வேறு திட்டங்களின் செயலாக்கம் குறித்து ஆய்வுசெய்யப்பட்டு, வேளாண்துறை தொடர்பான விவகாரங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்படும்.

விவசாயிகள் பதிவில் உள்ள செயலாக்கம், தோட்டக்கலைத் துறையில் உள்ள வாய்ப்புகள், பருப்பு வகைகள் உற்பத்தியில் தற்சார்ப்புக்கான இயக்கம், சமையல் எண்ணெய்கள் – எண்ணெய் வித்துக்கள் குறித்த தேசிய இயக்கம், இயற்கை வேளாண்மை குறித்த தேசிய இயக்கம், வேளாண் கடன் அட்டை தொடர்பான விவகாரங்கள் குறித்து சிறப்பு விவாதங்கள் நடைபெற உள்ளன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2262308&reg=3&lang=1

***

SS/IR/LDN/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2262450) வருகையாளர் எண்ணிக்கை : 11
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Bengali , Gujarati , Odia