சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

குறைந்த விலையில் தரமான சுகாதார சேவைகளை ஹெச்எல்எல் வழங்குகிறது : மத்திய சுகாதாரத் துறைச் செயலாளர் திருமதி புண்ய சலீலா ஸ்ரீவஸ்தவா

प्रविष्टि तिथि: 18 MAY 2026 2:40PM by PIB Chennai

இந்தியாவில் பொது சுகாதாரத்தை மேம்படுத்துவதில் ஹெச்எல்எல் லைஃப்கேர் லிமிடெட் நிறுவனம் ஆற்றிவரும் 60 ஆண்டுகால அர்ப்பணிப்புமிக்க சேவையைக் குறிக்கும் வகையில் நடைபெற்ற அந்நிறுவனத்தின் வைர விழா கொண்டாட்ட நிறைவு நிகழ்ச்சியில், மத்திய சுகாதாரத் துறைச் செயலாளர் திருமதி புண்ய சலீலா ஸ்ரீவஸ்தவா இன்று (18.05.2026) திருவனந்தபுரத்தில் உள்ள ஹெச்எலஎல் பேரூர்கடா தொழிற்சாலையில் உரையாற்றினார்.

 

1966-ல் நிறுவப்பட்ட ஹெச்எல்எல் லைஃப்கேர் லிமிடெட், இந்தியாவின் பொது சுகாதாரத்துக்கு ஆதரவளிப்பதில் ஒரு முன்னோடிப் பங்கை ஆற்றியுள்ளது என்று அவர் கூறினார். தேசிய குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டத்திற்கான அதன் ஆரம்பகாலப் பங்களிப்புகள் முதல், சுகாதாரப் பொருட்கள், நோயறிதல், எனப் பல்வேறு பிரிவுகளில் அதன் பன்முக இருப்பின் காரணமாக, இந்த அமைப்பு தொடர்ந்து புதுமையையும், அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்தி வருகிறது என்று அவர் தெரிவித்தார்.

 

 அனைவரையும் உள்ளடக்கிய, குறைந்த செலவிலான தரமான சுகாதார சேவைகளை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்ட பிரதமரின் தொலைநோக்குப் பார்வைக்கு இந்நிறுவனம் தனது அசைக்க முடியாத அர்ப்பணிப்பின் மூலம் இந்த நம்பிக்கை அளித்து வருகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

 

இந்நிகழ்ச்சியில், சுகாதாரம், குடும்ப நல அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள், ஹெச்எல்எல் லைஃப்கேர் லிமிடெட் நிறுவனத்தின் தலைமை நிர்வாகிகள், கூட்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள், மருத்துவத்துறை சார்ந்த முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2262252&reg=3&lang=1

 

***

(Release ID : 2262252)

SS/PLM/EA


(रिलीज़ आईडी: 2262377) आगंतुक पटल : 50
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Punjabi , Telugu , Malayalam