ஆயுஷ்
azadi ka amrit mahotsav

எஸ் -வியாசா சார்பில் யோகா நிகழ்ச்சி : பெங்களூருவில் சுமார் 650 பேர் பங்கேற்பு

இடுகை இடப்பட்ட நாள்: 17 MAY 2026 2:53PM by PIB Chennai

2026-ம் ஆண்டு சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு நடைபெறும் 100 நாள் முன்னோட்டத் தொடர் (கவுண்ட் டவுன் - Count Down) நிகழ்வுகளின் ஒரு பகுதியாக, நிகர்நிலைப் பல்கலைக்கழகமான சுவாமி விவேகானந்த யோகா அனுசந்தான சம்ஸ்தானம் எனப்படும் எஸ்-வியாசா(S-VYASA), மொரார்ஜி தேசாய் தேசிய யோகா நிறுவனத்துடன் (MDNIY) இணைந்து, பெங்களூருவில் இன்று (17.05.2026) யோகா நிகழ்ச்சியை வெற்றிகரமாக ஏற்பாடு செய்திருந்தது.

இந்நிகழ்ச்சியில், எஸ்-வியாசாவின் நிறுவனரும் பத்மஸ்ரீ விருது பெற்றவருமான டாக்டர் எச். ஆர். நாகேந்திரா, யோகாவின் முக்கியத்துவம், அதன் அறிவியல் பரிமாணங்கள், அன்றாட வாழ்வில் அதன் முக்கியத்துவம் ஆகியவற்றை எடுத்துரைத்தார். தற்கால சமூகத்தில் முழுமையான ஆரோக்கியம், மனநலம், நல்லிணக்கம் ஆகியவற்றை மேம்படுத்துவதில் யோகாவின் பங்கை அவர் எடுத்துரைத்தார்.

நிகழ்ச்சியின் போது நடத்தப்பட்ட யோகா அமர்வில், சுமார் 650 பங்கேற்பாளர்கள் மிகுந்த ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, இன்றைய டிஜிட்டல் யுகத்தில் இளைஞர்களின் நல்வாழ்வு, மனநலம் ஆகியவற்றில் கவனம் செலுத்தும் வகையில் கருத்தரங்கும் ஏற்பாடு செய்யப்பட்டது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2261962&reg=3&lang=1

***

TV/PLM/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2262030) வருகையாளர் எண்ணிக்கை : 3
இந்த வெளியீட்டை படிக்க: Kannada , English , हिन्दी