பெட்ரோலியம் மற்றம் இயற்கை எரிவாயு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஒடிசாவில் பெட்ரோல், டீசல், எல்பிஜி விநியோகம் தடையின்றி நடைபெறுகிறது

இடுகை இடப்பட்ட நாள்: 15 MAY 2026 9:40PM by PIB Chennai

ஒடிசாவின் குறிப்பிட்ட சில விற்பனை நிலையங்களில் பெட்ரோல், டீசல் கிடைக்கவில்லை என சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இதற்குப் பதிலளிக்கும் விதமாக, மாநிலம் முழுவதும் உள்ள சில்லறை விற்பனை நிலையங்களில் போதுமான பெட்ரோல், டீசல் கையிருப்பு உள்ளது என்பதையும், ஒட்டுமொத்த விநியோக நிலை இயல்பாகவும் நிலையாகவும் உள்ளது என்பதையும் எண்ணெய் நிறுவனங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

 

 எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்கள் சம்பந்தப்பட்ட சில்லறை விற்பனை நிலையங்களில் ஒருங்கிணைந்த மறுநிரப்பு நடவடிக்கைகளைத் தொடங்கி, விரைவாக நடவடிக்கை எடுத்துள்ளன. சரக்கு இருப்பு நிலைகள் உடனுக்குடன் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருவதுடன், கையிருப்பு குறைந்துவிட்டதாகத் தெரிவிக்கும் விற்பனை நிலையங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது.

 

ஒடிசா முழுவதும் உள்ள தனது அனைத்து விநியோக மையங்களிலும் சில்லறை விற்பனை நிலையங்களிலும் பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் போதுமான கையிருப்பு பராமரிக்கப்பட்டு வருவதாக இந்தியன் ஆயில் நிறுவனம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. கவலைப்படத் தேவையில்லை என இந்தியன் ஆயில் நிறுவனம் பொதுமக்களுக்கு உறுதியளிப்பதோடு, பீதியுடன் பொருட்களை வாங்குவதைத் தவிர்க்குமாறு நுகர்வோரிடம் பணிவுடன் வேண்டுகோள் விடுத்துள்ளது.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2261651&reg=3&lang=1

 

(Release ID : 2261651)

TV/PLM/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2261736) வருகையாளர் எண்ணிக்கை : 44
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Odia , Telugu