ஊரக வளர்ச்சி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மத்திய அமைச்சர் திரு சிவராஜ் சிங் சௌஹான் சதாராவில் இருந்து மகாராஷ்டிராவுக்குப் பரிசளித்தார்: 5 லட்சம் கிராமப்புற குடும்பங்கள் உறுதியான வீடுகளின் பெருமைமிக்க புதுமனை புகுவிழாவைக் கொண்டாடின

இடுகை இடப்பட்ட நாள்: 15 MAY 2026 4:24PM by PIB Chennai

மகாராஷ்டிராவின் சதாராவில் உள்ள சைனிக் பள்ளி மைதானத்தில் இன்று  நடைபெற்ற "பிரதமரின் ஊரக வீட்டு வசதி திட்டத்தின் பயனாளிகள் மாநாடு மற்றும் மெகா வீட்டுவசதி திட்ட  மாநில அளவிலான விருது வழங்கும் விழா"வில், மத்திய வேளாண்மை, விவசாயிகள் நலன் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் திரு சிவராஜ் சிங் சௌஹான் பங்கேற்று கட்டி முடிக்கப்பட்ட 5 லட்சம் கிராமப்புற வீடுகளுக்கான புதுமனைப்புகு விழாவைத் தொடங்கி வைத்தார். விழாவில் 5 பயனாளிகளுக்கு வீட்டு சாவிகளை வழங்கினார்.  மகாராஷ்டிராவின் ஊரக வளர்ச்சிக்குப் புதிய உத்வேகம் அளிக்கும் பல முக்கிய முடிவுகளையும் அறிவித்தார்.

இந்த விழாவில் பேசிய மத்திய அமைச்சர் திரு சிவராஜ் சிங் சௌஹான், பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையின் கீழ், நாட்டில் எந்தவொரு ஏழையும் குடிசை வீட்டில் வாழக்கூடாது என்றும், தகுதியுள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு கண்ணியமான நிரந்தர வீடு கிடைக்க வேண்டும் என்று மத்திய அரசு உறுதியாகத் தீர்மானித்துள்ளது என்று தெரிவித்தார். பிரதமரின் ஊரக வீட்டு வசதி திட்டத்தை செயல்படுத்துவதில் மகாராஷ்டிரா குறிப்பிடத்தக்க பணியைச் செய்துள்ளது என்றும், சாதனை நேரத்தில் 5 லட்சம் வீடுகளைக் கட்டி முடித்து, நல்லாட்சி, வெளிப்படைத்தன்மை மற்றும் பலன் சார்ந்த நிர்வாகத்திற்கு சிறந்த முன்மாதிரியை அமைத்துள்ளது என்றும் அவர் கூறினார்.

 பிரதமரின் ஊரக வீட்டு வசதி திட்டத்தின் கீழ், 2026-27 நிதியாண்டில் மகாராஷ்டிராவிற்கு ரூ. 8,368.50 கோடி மத்திய அரசின் நிதிப் பங்கு விடுவிக்கப்படும் என  திரு சௌஹான் அறிவித்தார். இந்தத் தொகை, மாநிலத்தில் உள்ள கிராமப்புற ஏழைகளுக்கு வீடுகள் கட்டும் பணியை மேலும் விரைவுபடுத்துவதோடு, வீடற்றோர் இல்லாத கிராமப்புற மகாராஷ்டிராவை உருவாக்கும் உறுதியையும் வலுப்படுத்தும் என்று அவர் கூறினார்.

மகாராஷ்டிர முதலமைச்சர் திரு தேவேந்திர ஃபட்னவிஸ் இந்த நிகழ்வில் பேசுகையில், பிரதமர் திரு மோடி,  மத்திய அமைச்சர் திரு சிவராஜ் சிங் சௌஹான் ஆகியோரின் ஆதரவுடன், மகாராஷ்டிரா சாதனை அளவாக 30 லட்சம் வீடுகளுக்கு ஒப்புதல் பெற்றது என்றும், மாநிலம் சாதனை நேரத்தில் 50 லட்சம் வீடுகளைக் கட்டி முடித்து, இன்று அவற்றைப் பயனாளிகளுக்கு அர்ப்பணித்தது என்றார். வீடுகளின் தரத்தை மேம்படுத்துதல், சூரிய சக்தி மூலம் மின்சாரம் வழங்குதல், தகுதியுள்ள நிலமற்ற குடும்பங்களுக்கு உதவி வழங்குதல் ஆகியவற்றின் மூலம், மாநில அரசு இந்தத் திட்டத்தை ஒரு விரிவான சமூகப் பாதுகாப்பு மாதிரியாக மாற்றியுள்ளது என்றும் அவர் கூறினார்.

இந்த விழாவில் மாநில ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் திரு ஜெய்குமார் கோரே, சுற்றுலா, சுரங்கம் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் நலத்துறை அமைச்சரும், சதாராவின் பொறுப்பு அமைச்சருமான திரு சம்புராஜ் தேசாய், பொதுப்பணித்துறை அமைச்சர் திரு. ஷிவேந்திரசிங் போசாலே, நிவாரணம் மற்றும் மறுவாழ்வுத் துறை அமைச்சர் திரு மகரந்த் ஜாதவ் (பாட்டில்), ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் இணையமைச்சர்  திரு யோகேஷ் கதம், நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீமந்த் சத்ரபதி உதயன்ராஜே போசாலே ஆகியோரும் கலந்து கொண்டனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2261411&reg=3&lang=1

 

****

TV/SMB/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2261610) வருகையாளர் எண்ணிக்கை : 7
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Marathi , Gujarati