புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம் அமைச்சகம்
2022-23 மற்றும் 2023-24-ம் ஆண்டுகளுக்கான வழங்கல் மற்றும் பயன்பாட்டு அட்டவணைகள் வெளியீடு
இடுகை இடப்பட்ட நாள்:
15 MAY 2026 4:00PM by PIB Chennai
மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசிய புள்ளியியல் அலுவலகம் , '2022-23 மற்றும் 2023-24-ம் ஆண்டுகளுக்கான வழங்கல் மற்றும் பயன்பாட்டு அட்டவணைகளை ' வெளியிட்டுள்ளது. இந்த வெளியீடு இந்தியாவின் தேசிய கணக்கியல் கட்டமைப்பில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கிறது. ஏனெனில் இது முந்தைய 2011-12 அடிப்படை ஆண்டுத் தொடருக்கு பதிலாக, 2022-23 என்ற திருத்தப்பட்ட அடிப்படை ஆண்டின் கீழ் தொகுக்கப்பட்ட முதலாவது விரிவான வழங்கல் மற்றும் பயன்பாட்டு அட்டவணைகளின் தொகுப்பாகும். 2022-23-ஐ அடிப்படையாகக் கொண்ட வருடாந்தர தேசிய கணக்கு மதிப்பீடுகளின் புதிய தொடரானது, சர்வதேச சிறந்த நடைமுறைகளையும் ஐ.நா தேசிய கணக்குகள் அமைப்பின் பரிந்துரைகளையும் பின்பற்றி, 2026 பிப்ரவரி 27 அன்று வெளியிடப்பட்டது. இந்தப் புதிய தொடரில், இறுதி மதிப்பீட்டின் போது தற்போதைய விலையில் உற்பத்தி/வருமான மதிப்பீட்டிற்கும் செலவின மதிப்பீட்டிற்கும் இடையேயான முரண்பாட்டை நீக்குவதற்காக, வருடாந்தர திருத்தப்பட்ட மதிப்பீடுகளின் தொகுப்பு வழங்கல் மற்றும் பயன்பாட்டு அட்டவணை கட்டமைப்புடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.
தேசிய கணக்குகள் கட்டமைப்பில், வழங்கல் மற்றும் பயன்பாட்டு அட்டவணைகள் மிகவும் சக்திவாய்ந்த, தரவுகள் நிறைந்த கருவிகளில் ஒன்றாகும். அவை அனைத்துத் தொழில்கள் மற்றும் இறுதித் தேவைப் பிரிவுகளில் பொருட்கள் மற்றும் சேவைகளின் உற்பத்தி, விநியோகம் மற்றும் பயன்பாட்டை வரைபடமாக்குகின்றன இதன் மூலம், ஒரு பொருளாதாரத்தில் நடைபெறும் அனைத்துப் பொருளாதார நடவடிக்கைகளின் விரிவான, முழுமையான சித்திரத்தை அவை வழங்குகின்றன. புதிய தொடரின் முக்கிய அம்சங்களில் ஒன்று, ஆண்டு மதிப்பீடுகளை வழங்கல் மற்றும் பயன்பாட்டு அட்டவணை கட்டமைப்புடன் முழுமையாக ஒருங்கிணைப்பதாகும். இதன் மூலம், உற்பத்தி/வருமான அணுகுமுறைக்கும் தற்போதைய விலைகளில் செலவின அணுகுமுறைக்கும் இடையிலான புள்ளிவிவர முரண்பாடுகளை நீக்குவதற்காக, 2022-23 மற்றும் 2023-24-ம் ஆண்டுகளின் மதிப்பீடுகள் இறுதிக் கட்டத்தில் சரிசெய்யப்படுகின்றன. புதிய தொடரில் இணைக்கப்பட்டுள்ள பல முக்கிய மேம்பாடுகளைக் கருத்தில் கொண்டு இந்த ஒருங்கிணைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மொத்த உள்நாட்டு உற்பத்தி சரிபார்ப்புக்கு அப்பால்,வழங்கல் மற்றும் பயன்பாட்டு அட்டவணைகள் பல்வேறு நிர்வாக மற்றும் கணக்கெடுப்பு ஆதாரங்களிலிருந்து வரும் தரவுகளை சரிபார்த்து, இணக்கப்படுத்த ஒரு சக்திவாய்ந்த கருவியாக விளங்குகின்றன. இதன் மூலம், தேசிய கணக்குப் புள்ளிவிவரங்களின் தரத்தையும் நம்பகத்தன்மையையும் அவை வலுப்படுத்துகின்றன. இந்த விரிவான பொருள் சார்ந்த தகவல்கள், கொள்கை வகுப்பாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் கல்வியாளர்களுக்கு இந்தியப் பொருளாதாரத்தின் கட்டமைப்பு, இயக்கவியல் ஆகியவற்றின் நுணுக்கமான பகுப்பாய்வை மேற்கொள்ள உதவுகின்றன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2261377®=3&lang=1
****
TV/SMB/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2261599)
வருகையாளர் எண்ணிக்கை : 9