சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
சக்ஷ்ம் திட்டத்தின் மூலம் மகளிரை மையமாகக் கொண்ட திறன் மேம்பாட்டை தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் ஊக்குவிக்கிறது
प्रविष्टि तिथि:
15 MAY 2026 3:09PM by PIB Chennai
அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவிக்க தேசிய நெடுங்சாலைகள் ஆணையம் வெர்ட்டிஸ் என்ற அறக்கட்டளையுடன் இணைந்து சக்ஷ்ம் என்ற திட்டத்தைச் செயல்படுத்துகிறது. இது இளைஞர்களுக்கும் கிராமப்புற பெண்களுக்கும் திறன் மேம்பாட்டு பயிற்சிகளை அளித்து அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துகிறது.
இதுவரை இத்திட்டத்தில் 6000-க்கும் மேற்பட்டோர் பயிற்சி பெற்று அவர்களில் 4000-க்கும் அதிகமானோர் பல்வேறு துறைகளில் வேலைவாய்ப்புகளைப் பெற்றுள்ளனர். அவர்கள் சராசரியாக மாதம் 16000 ரூபாய் வரை வருவாய் ஈட்டுகின்றனர். இவர்களில் 80 சதவீதத்திற்கும் அதிகமானோர் மகளிர் என்பது குறிப்பிடத்தக்கது.
மின்சார இணைப்புப் பணிகள், தையல், வீட்டு உபயோக உபகரணங்கள் பழுது பார்த்தல் போன்ற பயிற்சிகள் இவர்களுக்கு வழங்கப்படுகிறது. இது அவர்களுக்கு வேலைவாய்ப்பையும் பொருளாதார மேம்பாட்டையும் வழங்குகிறது. சாலைக்கட்டமைப்பை மேம்படுத்துவதோடு மட்டுமின்றி சமூக வளர்ச்சிக்கும் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் பங்காற்றி வருகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2261367®=3&lang=1
**
SS/PLM/KPG/SH
(रिलीज़ आईडी: 2261544)
आगंतुक पटल : 57