சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

போதைப்பொருள் தடுப்பு தொடர்பான செயலி இந்த அச்சுறுத்தல்களுக்கு எதிரான திருப்புமுனையாக மாறிவருகிறது

இடுகை இடப்பட்ட நாள்: 15 MAY 2026 5:39PM by PIB Chennai

மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் போதைப் பொருள் இல்லாத இந்தியா இயக்கத்தின் ஒரு பகுதியாக என்எம்பிஏ 2.0 செயலியை அறிமுகம் செய்துள்ளது. இந்த செயலியின்  போதைப் பொருள் இல்லாத இந்தியாவை உருவாக்க விரும்பும் ஒவ்வொரு நபரும் தன்னார்வலர்களாக தங்களைப்பதிவு செய்து கொள்ளலாம். இதன் மூலம் போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சார இயக்கத்தில் மக்களின் பங்கேற்பு அதிகரிக்கும்.

இந்த செயலியில் வயது, தொழில், பின்னணி என எந்தப் பாகுபாடின்றி ஒவ்வொரு தனிநபரும் தங்களைப் பதிவு செய்து கொள்ளலாம். இதில் ஏற்கனவே 28,000 பேர் பதிவு செய்து குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை செய்து வருகின்றனர்.

இது குறித்து சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் செயலாளர் திரு சுதான்சு பந்த்  கூறுகையில், போதைப் பொருள் இல்லாத இந்தியா என்பது ஒரு இயக்கம் மட்டுமல்ல அது தேசிய அளவிலான ஒரு உறுதியான தீர்மானம் என்று கூறினார்.  மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர், தொழில் வல்லுநர்கள், இளைஞர்கள், முதியோர் என அனைத்துத் தரப்பினரும் என்எம்பிஏ 2.0 செயலியில்தன்னார்வலராகப் பதிவு செய்து போதைப் பொருள் இல்லாத இந்தியாவுக்கு பங்களிக்கலாம் என்று அவர் கூறினார்.

இந்த செயலியை கூகுள் ப்ளே ஸ்டோர் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2261469&reg=3&lang=1

 

****

TV/PLM/KPG/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2261535) வருகையாளர் எண்ணிக்கை : 13
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Marathi