ஊரக வளர்ச்சி அமைச்சகம்
மகாராஷ்டிராவில், பிரதமரின் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் கட்டி முடிக்கப்பட்டுள்ள 5 லட்சம் வீடுகளுக்கான 'புதுமனை புகுவிழாவை' மத்திய அமைச்சர் திரு சிவராஜ் சிங் சவுகான் தொடங்கி வைக்கிறார்
இடுகை இடப்பட்ட நாள்:
14 MAY 2026 5:44PM by PIB Chennai
மகாராஷ்டிர மாநிலம் சதாராவில் உள்ள சைனிக் பள்ளி மைதானத்தில், 2026 மே 15 அன்று நடைபெறும், "பிரதமரின் கிராமப்புற வீட்டு வசதித் திட்டத்தின் பயனாளிகள் மாநாடு மற்றும் 'மாபெரும் வீட்டுவசதித் திட்டம்' மாநில அளவிலான விருது வழங்கும் விழா"வில், மத்திய ஊரக வளர்ச்சி மற்றும் வேளாண் அமைச்சர் திரு சிவராஜ் சிங் சவுகான், சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார். அம்மாநில முதலமைச்சர் திரு தேவேந்திர பட்னாவிஸ், துணை முதலமைச்சர்கள் திரு ஏக்நாத் ஷிண்டே, திருமதி. சுனேத்ரா அஜித் பவார், பல்வேறு மூத்த பிரமுகர்களும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர்.
இந்நிகழ்ச்சியின் போது, பிரதமரின் கிராமப்புற வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் கட்டி முடிக்கப்பட்டுள்ள 5 லட்சம் வீடுகளுக்கான 'புதுமனை புகு விழாவை' மத்திய அமைச்சர் தொடங்கி வைக்கிறார். இத்திட்டத்தின் கீழ் 3 கோடி வீடுகள் கட்டி முடிக்கப்பட்டதுடன் தொடர்புடைய பயனாளியை உள்ளடக்கிய, மொத்தம் 6 பிரதமரின் கிராமப்புற வீட்டு வசதித் திட்டப் பயனாளிகளுக்கு, வீட்டின் சாவிகளையும் மத்திய அமைச்சர் வழங்குகிறார். இது இந்தியாவின் கிராமப்புற வீட்டுவசதி ஏற்படுத்தும் வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க சாதனையாகும்.
இந்நிகழ்ச்சியில், 2026-27-ம் நிதியாண்டிற்காக, மகாராஷ்டிர மாநிலத்திற்கு, மத்திய அரசின் பங்களிப்பாக ரூ 8,368.50 கோடி மதிப்பிலான நிதி ஒதுக்கீட்டிற்கான ஒப்புதலை மத்திய அமைச்சர் வழங்குகிறார். கூடுதலாக, நான்காவது, பிரதமரின் கிராமப்புற வீட்டு வசதித் திட்டத்தின் கீழ், ரூ 122.98 கோடி மதிப்பிலான 35 சாலைத் திட்டப் பணிகளுக்கான ஒப்புதலும் வழங்கப்படும். இத்திட்டங்கள் அம்மாநிலத்தில் உள்ள 35 கிராமப்புறக் குடியிருப்புகளுக்குப் பயனளிக்கும்.
"மாபெரும் வீட்டுவசதித் திட்டம் 2023-24"-ன் கீழ், மாநில அளவிலான விருதுகளும் வழங்கப்படவுள்ளன. இந்த விருதுகள் வழங்கும் விழாவில், சிறப்பு மலர் மற்றும் காலாண்டு இதழ்' வெளியிடப்பட உள்ளன.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2261081®=3&lang=1
(Release ID: 2261081)
****
TV/SV/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2261171)
வருகையாளர் எண்ணிக்கை : 3