அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
azadi ka amrit mahotsav

எதிர் இணை குவாண்டம் நிலைகளின் முக்கியத் தரவுப் பண்புகளின் நன்மைகள்

இடுகை இடப்பட்ட நாள்: 14 MAY 2026 11:36AM by PIB Chennai

எதிர் நிலைகளில் தயாரிக்கப்பட்ட இரண்டு துகள்கள்ஒரே மாதிரியான இரண்டு துகள்களைக் காட்டிலும் சில நேரங்களில்அதிக தகவல்களை வெளிப்படுத்த முடியும் என்பதற்கான ஒரு வியக்கத்தக்க குவாண்டம் நிகழ்வை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

இந்தக் கண்டுபிடிப்புகள்அறியப்படாத குவாண்டம் சாதனங்களின் பண்புகளை மேம்படுத்துவதற்கும்குவாண்டம் தொழில்நுட்ப அடிப்படையிலான குறியீடு நெறிமுறைகளுக்கும் பெரிதும் பயனளிக்கும்.

குவாண்டம் இயற்பியலில்அனைத்தையும் ஒரே நேரத்தில் அறிய முடியாது.ஒரு குவாண்டம் தொழில்நுட்பத்தின் சில பண்புகளை ஒரே நேரத்தில் முழுமையான துல்லியத்துடன் தீர்மானிக்க முடியாது என்ற வரையறைகளும் உள்ளது. இரட்டைப் பிளவு சோதனையில் தகவல் மற்றும் குறுக்கீட்டுத் தெரிவுநிலைக்கு இடையேயான சமநிலைஅல்லது வெவ்வேறு அச்சுகளில் உள்ள சுழற்சிக் கூறுகள் போன்ற அளவீடுகளை ஒட்டுமொத்தமாக அளவிட இயலாமை ஆகியவை தற்கான உதாரணமாக உள்ளன.

ஒரு குவாண்டம் துகளின் வெவ்வேறு பண்புகளை,குறிப்பாகஒரு க்யூபிட்டின் சுழற்சியை நாம் எவ்வளவு சிறப்பாக ஒன்றுசேர்த்து அளவிட முடியும் என்பதை இந்த ஆய்வு ஆராய்கிறது. இரண்டு சுழற்சிகளும் ஒரே திசையில் இருக்கும் (இணை)அல்லது ஒன்று மற்றொன்றைப் பொறுத்துத் தலைகீழாக இருக்கும் (எதிர்இணை) வகையில் இதனை தயாரிக்க முடியும்.

ஒரே மாதிரியான பிரதிகள் அதிகப் பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்று உள்ளுணர்வு கூறலாம். எல்லாவற்றிற்கும் மேலாகஒரே நிலையின் இரண்டு பிரதிகளைக் கொண்டிருப்பது அதிகத் தகவல்களைக் கொண்டிருப்பது போல் தெரிகிறது. ஆனால் குவாண்டம் இயக்கவியல் சொல்வதற்கு வேறு ஒரு கதை கொண்டுள்ளது.

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் சுயாட்சி கொண்ட  நிறுவனமான எஸ். என். போஸ் தேசிய அடிப்படை அறிவியல் மையம்பாலகர் பிஜோய் கிருஷ்ண மகாவித்யாலயா மற்றும் கொல்கத்தாவில் உள்ள இந்தியப் புள்ளியியல் நிறுவனம் ஆகிய அமைப்புக்களைச் சேர்ந்த    ஆய்வுக் குழுஎதிர்இணை சுழற்சிகள் ஒரு குறிப்பிடத்தக்க பயனை    வழங்குகின்றன என்பதைக் காட்டுகிறது. அவை ஒன்றுக்கொன்று பொருந்தாத மூன்று சுழற்சிக் கூறுகளை ஒரே நேரத்தில் துல்லியமாகக் கணிக்க அனுமதிக்கின்றன.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2260903&reg=3&lang=1

***

(Release ID: 2260903)

SS/SV/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2261131) வருகையாளர் எண்ணிக்கை : 5
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Bengali , Bengali-TR