நிலக்கரி அமைச்சகம்
தன்பாத் பெல்காரியா நகரியத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் மறுவாழ்வுப் பணிகளை மத்திய இணையமைச்சர் திரு. சதீஷ் சந்திர துபே ஆய்வு செய்தார்
இடுகை இடப்பட்ட நாள்:
13 MAY 2026 9:24PM by PIB Chennai
மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை இணையமைச்சர் திரு. சதீஷ் சந்திர துபே, ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத்தில் உள்ள பெல்காரியா நகரியத்தைப் பார்வையிட்டு ஆய்வு செய்ததுடன், கோய்லா பவனில் நடைபெற்ற உயர்மட்ட ஆய்வுக் கூட்டத்திற்கும் தலைமை தாங்கினார். ஜாரியா நிலக்கரி சுரங்கத் தீ விபத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்காக மேற்கொள்ளப்பட்டு வரும் மறுவாழ்வுப் பணிகளை ஆய்வு செய்த அவர், குடியமர்த்தப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
இந்நிகழ்ச்சியில் அமைச்சருடன் தன்பாத் மாவட்ட ஆட்சியர், பிசிசிஎல் தலைவர் மற்றும் மேலாண் இயக்குநர் மற்றும் உயர் அதிகாரிகள் உடனிருந்தனர். நிகழ்ச்சியின் போது, பிசிசிஎல் நிறுவனத்தின் சமூகப் பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு இ-ரிக்ஷாக்களை வழங்கிய அமைச்சர், வாழ்வாதாரத் திட்டங்களுக்கான அடிக்கல்லையும் நாட்டினார். மறுவாழ்வுப் பணிகள் வெளிப்படைத்தன்மையுடனும், தரமாகவும் உரிய காலத்திற்குள் முடிக்கப்பட வேண்டும் என்று அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
தொடர்ந்து கோய்லா பவனில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில்,
ஜாரியா பெருந்திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் திட்டங்கள், நிலக்கரி உற்பத்தித் திறன் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் விரிவாக ஆய்வு செய்தார். நாட்டின் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்வதில் நிலக்கரித் துறையின் முக்கியப் பங்கை வலியுறுத்திய அவர், உற்பத்தித் திறனுடன் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் மறுவாழ்வுப் பணிகளையும் ஒருங்கிணைத்து மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2260871®=6&lang=1
***
EA/SE
(வெளியீட்டு அடையாள எண்: 2261110)
வருகையாளர் எண்ணிக்கை : 22