பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

டிஜிட்டல் ஓய்வூதிய சீர்திருத்தங்கள் நிர்வாகத்தை வெளிப்படையானதாகவும் எளிமையானதாகவும் மாற்றியுள்ளன: மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்

இடுகை இடப்பட்ட நாள்: 13 MAY 2026 6:04PM by PIB Chennai

புது தில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் இன்று நடைபெற்ற 16-வது அகில இந்திய ஓய்வூதிய குறைதீர்ப்பு கூட்டத்திற்கு மத்திய பணியாளர், பொது குறைகள் மற்றும் ஓய்வூதியங்கள் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தலைமை தாங்கி உரையாற்றினார். கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவின் ஓய்வூதிய நிர்வாகம் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் கண்டுள்ளதாகத் தெரிவித்த அவர், ஓய்வூதியதாரர்களை வெறும் பயனாளிகளாக மட்டும் பார்க்காமல், தேசத்தைக் கட்டியெழுப்புவதில் அனுபவமும் நிபுணத்துவமும் கொண்ட "மதிப்புமிக்க தேசிய ஆதாரமாக" அரசு கருதுவதாகக் குறிப்பிட்டார். பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், சிக்கலான விதிமுறைகளைக் களைந்து, தொழில்நுட்பத்தின் உதவியுடன் வெளிப்படையான மற்றும் எளிமையான நிர்வாக முறையை அரசு உறுதி செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த 16-வது ஓய்வூதிய குறைதீர்ப்பு கூட்டத்தில் 37 அமைச்சகங்களைச் சேர்ந்த 985 நீண்டகால நிலுவை வழக்குகளில், சுமார் 74 சதவீத வழக்குகளுக்கு (728 வழக்குகள்) உடனடித் தீர்வு காணப்பட்டது. குறிப்பாக, டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ் போன்ற சீர்திருத்தங்கள் மூலம் ஒரு கோடிக்கும் அதிகமான ஓய்வூதியதாரர்களின் குறைகள் தீர்க்கப்பட்டுள்ளன. குடும்ப ஓய்வூதிய விதிகள் எளிமைப்படுத்தப்பட்டதுடன், விவாகரத்து பெற்ற பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளி சார்ந்தோருக்கான சலுகைகள் மனிதாபிமான அடிப்படையில் வழங்கப்படுவதையும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். 'மிஷன் கர்மயோகி' திட்டத்தின் கீழ், அதிகாரிகள் தீர்வு காணும் மனப்பான்மையுடன் செயல்பட வேண்டும் என்று வலியுறுத்திய அவர், 2017 முதல் நடத்தப்பட்ட ஓய்வூதிய அதாலத் மூலம் இதுவரை 19,948 புகார்கள் வெற்றிகரமாகத் தீர்க்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:  https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2260768&reg=3&lang=2

 

***

EA/SE


(வெளியீட்டு அடையாள எண்: 2261089) வருகையாளர் எண்ணிக்கை : 23
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Punjabi , Telugu