PIB Backgrounder
azadi ka amrit mahotsav

நாட்டின் பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்பு உள்ளிட்டவற்றில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பெரும் பங்காற்றுகின்றன

प्रविष्टि तिथि: 14 MAY 2026 11:53AM by PIB Chennai

நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் தொடர்ந்து பங்களிப்பு செய்கின்றன. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 31 சதவீதமும், ஏற்றுமதியில் 48.58 சதவீதமும் பங்களிப்பைக் இவை கொண்டுள்ளன. இது நாடு முழுவதும் சுமார் 32.8 கோடி மக்களின் வாழ்வாதாரத்திற்கு ஆதரவு அளிக்கிறது. பதிவு செய்யப்படாத தொழில்நிறுவனங்களை உத்யம் மற்றும் உத்யம் உதவி தளங்கள் மூலம் அரசு முறைப்படுத்தியுள்ளது.

இதன் மூலம் 7.9 கோடிக்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்கள் முறைசார் பொருளாதாரத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. கடன் பெறுதல், சட்டப்பாதுகாப்பு ஆகியவற்றுக்கான கொள்கை, நடவடிக்கைகள் மேம்பட்டுள்ளதுடன், எளிதாக வர்த்தகம் செய்வதும் மேம்பட்டுள்ளது. ஜெம், டிஆர்இடிஎஸ், சமதான் ஆகிய டிஜிட்டல் தளங்கள் சிறந்த சந்தை அணுகலுக்கும் விரைவாக பணம் பெறுவதற்கும் வழிவகுக்கிறது. இந்த முயற்சிகள் ஒருங்கிணைந்து குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை வலுப்படுத்தி ஊரகம் மற்றும் சிறு நகரங்களில் வளர்ச்சியை மேம்படுத்துகிறது.

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் தொழில்முனைவை ஊக்கப்படுத்தி, வேலைவாய்ப்பை உருவாக்கி, பரவலாக்கப்பட்ட தொழில் வளர்ச்சியை ஆதரிக்கிறது. ஊரக மற்றும் சிறு நகரங்களின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் முக்கியப் பங்கு வகிப்பதால் இத்துறைக்காக பல்வேறு முன்முயற்சிகளை அரசு மேற்கொண்டுள்ளது. 7.47 கோடிக்கும் அதிகமான தொழில் நிறுவனங்கள் உற்பத்தி, சேவைகள் மற்றும் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன. வேளாண்துறைக்கு அடுத்தபடியாக இத்துறை பெரும் வேலைவாய்ப்புகளை அளிக்கிறது.  

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:  https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2260904&reg=3&lang=1

***

SS/IR/RJ/PD


(रिलीज़ आईडी: 2260975) आगंतुक पटल : 50
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Bengali , Gujarati