மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
அனைவரையும் உள்ளடக்கிய செயற்கை நுண்ணறிவுச் சூழலியலை வலுப்படுத்த, இந்தியா ஏஐ இயக்கம், கார்யா அமைப்புடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது
இடுகை இடப்பட்ட நாள்:
13 MAY 2026 6:32PM by PIB Chennai
மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்திய செயற்கை நுண்ணறிவு (ஏஐ) இயக்கம், செயற்கை நுண்ணறிவுப் பொருளாதாரத்தின் அணுகலை அதிகரிக்கப் பணியாற்றும் லாப நோக்கற்ற அமைப்பான கார்யாவுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் வாயிலாக இரு தரப்பும் இணைந்து, தரவு, தொழில்நுட்பம் மற்றும் திறன் மேம்பாடு ஆகியவற்றில் ஒத்துழைப்பதன் மூலம் இந்தியாவின் அனைவரையும் உள்ளடக்கிய செயற்கை நுண்ணறிவு சூழலியலை வலுப்படுத்தும் பணியில் ஈடுபடும்.
இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம், அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் பிரதிநிதித்துவ செயற்கை நுண்ணறிவு அமைப்புகளுக்கு ஆதரவளிக்கும் வகையில், உயர்தர மொழி மற்றும் பன்முகத் தரவுத்தொகுப்புகளை உருவாக்குதல், தொகுத்தல் மற்றும் பகிர்வதில் கவனம் செலுத்தும்.
இந்தக் கூட்டாண்மையின் ஒரு பகுதியாக, AIKosh தரவு உள்கட்டமைப்பு, மாதிரி மதிப்பீட்டுக் கட்டமைப்புகள் மற்றும் தரவுத்தொகுப்பின் தரம், சரிபார்ப்பு மற்றும் இயங்குதன்மைக்கான தரநிலைகளை வலுப்படுத்த இரு நிறுவனங்களும் தொழில்நுட்ப ஒத்துழைப்பை மேற்கொள்ளும்.
இந்தக் கூட்டாண்மை குறித்துக் கருத்துத் தெரிவித்த, இந்திய செயற்கை நுண்ணறிவு இயக்கத்தின் தலைமைச் செயல்பாட்டு அதிகாரி திருமதி கவிதா பாட்டியா, "அனைவரையும் உள்ளடக்கிய ஒரு செயற்கை நுண்ணறிவுச் சூழலியலை உருவாக்குவதற்கு, நமது மக்கள் மற்றும் மொழிகளின் முழுமையான பன்முகத்தன்மையைப் பிரதிபலிக்கும் தரவுகள் தேவைப்படுகின்றன. கார்யாவுடனான இந்த ஒத்துழைப்பு, இருதரப்பின் வலிமைகளை ஒன்றிணைக்கிறது. மேலும், உயர் தரம் மற்றும் பிரதிநிதித்துவம் ஆகிய இரண்டையும் கொண்ட வளங்களை உருவாக்குவதை நாங்கள் ஆவலுடன் எதிர்நோக்குகிறோம்," என்று கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2260790®=3&lang=1
(Release ID: 2260790)
****
TV/BR/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2260878)
வருகையாளர் எண்ணிக்கை : 6