பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

அறிவாற்றலும் பாதுகாப்பும் என்ற தலைப்பில் 3-வது மாநாடு : பாதுகாப்புத் துறை இணையமைச்சர் நாளை தொடங்கி வைக்கிறார்

இடுகை இடப்பட்ட நாள்: 13 MAY 2026 5:46PM by PIB Chennai

பாதுகாப்புத் துறை இணையமைச்சர் திரு சஞ்சய் சேத், நாளை (2026 மே 14) புது தில்லியில் உள்ள மனேக்ஷா மையத்தில் 'கலாம் & கவச்' (அறிவாற்றலும் பாதுகாப்பும்) மாநாட்டின் மூன்றாவது பதிப்பைத் தொடங்கி வைக்கிறார். பாதுகாப்புத் துறையில் மாற்றம், உள்நாட்டுத் திறன் மேம்பாடு, எதிர்காலப் போர் தயார்நிலை ஆகியவை குறித்து, இந்த மாநாட்டில் விவாதிக்கப்படும். இதில் மூத்த கொள்கை வகுப்பாளர்கள், பாதுகாப்புத் துறை தொழில் துறையினர், புத்தொழில் நிறுவனங்கள், கல்வியாளர்கள் பங்கேற்பார்கள்.

 

இந்த நிகழ்வானது, ஒருங்கிணைப்பு, தற்சார்பு, புத்தாக்கம் வியூகப் பார்வையை மையமாகக் கொண்டிருப்பதோடு, உள்நாட்டு உற்பத்தி, சர்வதேச ஒத்துழைப்பு ஆகியவற்றிற்கும் முக்கியத்துவம் அளிக்கும். இந்த நிகழ்வில், பாதுகாப்புத் துறையின் எதிர்காலத்தை மையமாகக் கொண்ட உயர்மட்ட உத்திசார் அமர்வுகள், சிறப்புரைகள், கலந்துரையாடல்கள், தொழில்துறை சந்திப்புகள் ஆகியவை இடம்பெறும். இதில் முப்படைகளின் தளபதி ஜெனரல் அனில் சௌஹான், கடற்படைத் தலைமைத் தளபதி அட்மிரல் தினேஷ் கே திரிபாதி, பாதுகாப்பு அமைச்சகம், ஒருங்கிணைந்த பாதுகாப்புப் படைத் தலைமையகம், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு, தேசிய பாதுகாப்பு ஆலோசனைக் குழு ஆகியவற்றின் மூத்த அதிகாரிகள், வெளிநாட்டுத் தூதர்கள், நட்பு நாடுகளின் பாதுகாப்புத் துறை அதிகாரிகள், உலகளாவிய பாதுகாப்பு நிறுவன பிரதிநிதிகள் உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2260748&reg=3&lang=1

(Release ID: 2260748)

****

TV/PLM/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2260828) வருகையாளர் எண்ணிக்கை : 8
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी