சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மாவட்ட நீதிமன்றங்கள், சார்பு நீதிமன்றங்களுக்கான உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான நிதியில் முதல் தவணை விடுவிப்பு

இடுகை இடப்பட்ட நாள்: 13 MAY 2026 5:19PM by PIB Chennai

மத்திய சட்டம், நீதி அமைச்சகத்தின் கீழ் உள்ள நீதித்துறையின் மாவட்ட மற்றும் கீழமை நீதிமன்றங்களுக்கான உள

உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன் கீழ், 2026-27-ம் நிதியாண்டிற்கு ₹401.50 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில் முதல் தவணையை, மத்திய சட்டத் துறை இணையமைச்சர் திரு அர்ஜுன் ராம் மேக்வால் இன்று (13.05.2026) புது தில்லியில் காணொலிக் காட்சி வாயிலாக மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கு வழங்கினார். இத்திட்டத்தின் கீழ் மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கு நிதி விடுவிப்பது, மாநில/யூனியன் பிரதேச அரசுகளின் முயற்சிகளை வலுப்படுத்துவது ஆகியவை மூலம் நாடு முழுவதும் உள்ள மாவட்ட, கீழமை நீதிமன்ற உட்கட்டமைப்புகள் வலுப்படுத்தப்படும். அது சார்ந்த நடவடிக்கைகளில் நீதித் துறையின் தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாக இது அமைந்துள்ளது.

 

இந்நிகழ்ச்சியில் சம்பந்தப்பட்ட உயர் நீதிமன்றங்கள் மாநில / யூனியன் பிரதேச அரசுகளின் பிரதிநிதிகள் காணொலிக் காட்சி மூலம் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

 

கூட்டத்தில் உரையாற்றிய, சட்டத் துறை இணையமைச்சர் திரு அர்ஜுன் ராம் மேக்வால், நீதித்துறைக்கு போதுமான உட்கட்டமைப்புகள் இருக்க வேண்டியதன் தேவையையும் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார். நீதி வழங்கும் நடவைக்கையை மேலும் எளிதில் அணுகக்கூடியதாகவும், மக்களை மையமாகக் கொண்டதாகவும் மாற்றுவதை மையமாகக் கொண்ட இத்திட்டத்தின் நோக்கம், பின்னணி ஆகியவற்றை அவர் எடுத்துரைத்தார்.  இத்திட்டத்தின் தற்போதைய காலவரையறை 2026 மார்ச் 31 அன்று முடிவடைகிறது என்றும், இத்திட்டத்தை மேலும் 5 ஆண்டுகளுக்கு, அதாவது 2030-31 நிதியாண்டு வரை நீட்டிக்கும் பணி நடைபெற்று வருகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்தக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2260728&reg=3&lang=1

 

(Release ID:  2260728)

****

TV/PLM/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2260822) வருகையாளர் எண்ணிக்கை : 9
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Assamese , Telugu