சிறுபான்மையினர் நலன் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சகத்தின் சார்பில் செயற்கை நுண்ணறிவு மூலம் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி தொடர்பான தேசிய மாநாடு நாளை நடைபெறுகிறது

இடுகை இடப்பட்ட நாள்: 13 MAY 2026 1:37PM by PIB Chennai

சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சகத்தின் சார்பில் “சிறுபான்மையினர் நலன் – வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கு செயற்கை நுண்ணறிவு மூலம் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி” என்ற தலைப்பில் தேசிய மாநாடு நாளை (14.05.2026) நடைபெறுகிறது. இந்த மாநாடு, அனைவரையும் உள்ளடக்கிய நிர்வாகத்தை வலுப்படுத்துவது, கொள்கை ரீதியான செயல்பாடுகளை மேம்படுத்துதல், நாடு முழுவதும் உள்ள சிறுபான்மையினருக்கு தொழில்நுட்பம் சார்ந்த நலத்திட்டங்களை ஊக்குவிப்பது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்த தேசிய மாநாட்டில், மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள் பல்வேறு மாநிலங்கள் - யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த அதிகாரிகள், பிரதிநிதிகள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.  நாடு முழுவதும் உள்ள சிறுபான்மையினருக்கு அமைச்சகத்தின் திட்டங்கள் முழுமையாகச் சென்றடைவதையும், மத்திய-மாநில அரசுகளின் ஒருங்கிணைப்பை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்டு இந்த மாநாடு நடத்தப்படுகிறது.

நலத்திட்டங்களின் செயல்திறனை மேம்படுத்துதல், கண்காணித்தல், செயல்படுத்துதல் ஆகியவற்றில் செயற்கை நுண்ணறிவின் பங்கு குறித்து பிரத்யேக அமர்வுகள் நடத்தப்படவுள்ளன. இதில், முன்னணி செயற்கை நுண்ணறிவு நிறுவனங்களின் பிரதிநிதிகள் பங்கேற்று விளக்கம் அளிக்க உள்ளனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2260558&reg=3&lang=1  

------

SS/PLM/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2260811) வருகையாளர் எண்ணிக்கை : 7
இந்த வெளியீட்டை படிக்க: Kannada , English , Urdu , हिन्दी , Bengali-TR , Bengali