மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
azadi ka amrit mahotsav

தகவல் தொழில்நுட்பம் சார்ந்த தேசிய மாநாட்டில், ஐபி கேட்டலிஸ்ட் முன்முயற்சி மற்றும் டிஜிட்டல் தளம் அறிமுகம்

प्रविष्टि तिथि: 13 MAY 2026 12:23PM by PIB Chennai

மத்திய அரசின் மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் சார்பில், “காப்புரிமையிலிருந்து தயாரிப்பு வரை: மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத்தில் ஐபி வணிகமயமாக்கலை விரைவுபடுத்துதல்” என்ற தலைப்பில் ஒரு நாள் தேசிய மாநாடு நேற்று (12.05.2026) புதுதில்லியில் நடைபெற்றது. இந்த மாநாடு, மின்னணுவியல், தகவல் தொழில்நுட்பத் துறையில் இந்தியாவின் அறிவுசார் சொத்துரிமை அமைப்பு, புத்தாக்கச் சூழல் அமைப்பு ஆகியவற்றை வலுப்படுத்துவது குறித்து விவாதிப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டது. இதில், கொள்கை வகுப்பாளர்கள், புதுமைப் படைப்பாளர்கள், தொழில்துறைத் தலைவர்கள், புத்தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள், குறு, சிறு நடுத்தர நிறுவனங்களின் பிரதிநிதிகள், கல்வியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் ஆகியோரை ஒன்றிணைத்தது.

தொடக்க அமர்வின் போது, ​​ஐபி கேட்டலிஸ்ட் முன்முயற்சியானது, அதன் டிஜிட்டல் தளமான https://cipie.in என்ற தளத்துடன் தொடங்கி வைக்கப்பட்டது. தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் செயலாளர் திரு எஸ் கிருஷ்ணன் இதை முறைப்படி தொடங்கி வைத்தார்.

ஆராய்ச்சி, அறிவுசார் சொத்துரிமை உருவாக்கம் ஆகியவை முதல் தொழில்நுட்பப் பரிமாற்றம், வணிகமயமாக்கல், சந்தைப் பயன்பாடு ஆகியவை வரையிலான முழுமையான புத்தாக்க முறைகளை ஆதரிக்கும் ஒரு விரிவான டிஜிட்டல் சூழலமைப்பை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு ஐபி கேட்டலிஸ்ட் முன்முயற்சி செயல்படுத்தப்படுகிறது. இது தகவல் தொழில் நுட்ப அமைச்சகத்தின் பல்வேறு அமைப்புகள், புத்தொழில் நிறுவனங்கள், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள், கல்வித்துறை, தொழில்துறை ஆகியவற்றுக்கிடையே வலுவான ஒத்துழைப்பை உருவாக்கும். இதன் மூலம், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கும் தொழில்துறை பயன்பாட்டிற்கும் இடையிலான இடைவெளி குறையும்.

இந்த மாநாட்டில், ஆய்வகத்திலிருந்து சந்தை வரையிலான செயல்முறையை விரைவுபடுத்துதல், புத்தொழில் நிறுவனங்கள், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் ஆகியவற்றை மேம்படுத்துதல், தொழில்நுட்பப் பரிமாற்றம், உலகளாவிய காப்புரிமை உத்திகள், அறிவுசார் சொத்துரிமையின் மதிப்பு உள்ளிட்ட கருப்பொருள்களில் பல குழு விவாதங்கள் இடம்பெற்றன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2260532&reg=3&lang=1

----

(Release ID : 2260532)

SS/PLM/EA.


(रिलीज़ आईडी: 2260750) आगंतुक पटल : 57
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Telugu , Urdu , हिन्दी , English