தேசிய மனித உரிமைகள் ஆணையம்
azadi ka amrit mahotsav

புலம்பெயர் தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாத்தல் குறித்த கூட்டத்தை தேசிய மனித உரிமைகள் ஆணையம் நடத்தியது

இடுகை இடப்பட்ட நாள்: 13 MAY 2026 11:56AM by PIB Chennai

புலம்பெயர் தொழிலாளர்கள் உரிமைகளைப் பாதுகாத்தல்: அரசு மற்றும் தனியார் துறைகளின் பகிரப்பட்ட பொறுப்புக் குறித்த குழுக் கூட்டத்திற்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் புதுதில்லியில் ஏற்பாடு செய்திருந்தது. இக்கூட்டத்தில் பேசிய தேசிய மனித உரிமைகள் ஆணையத்தலைவர் நீதிபதி  வி ராமசுப்பிரமணியன், மற்றவர்களுடன் ஒப்பிடும் போது, புலம்பெயர் தொழிலாளர்கள் அமைப்புசாராத் துறையைச் சேர்ந்தவர்களாக இருப்பதால், பெரும் சவால்களை எதிர்கொள்வதாக கூறினார்.

மொழித்தடைகள், இடம் பெயர்தல், நிலையான இருப்பிடம் இல்லாமை ஆகியவை அவர்கள் தங்கள் உரிமைகளை உரிய முறையில் பாதுகாத்துக் கொள்வதைத் தடுப்பதாகத் தெரிவித்தார். தொழிலாளர்களின் உரிமைகளுக்காக தொழிற்சங்கங்களின் வலுவான மரபு குறித்தும்  அவர் நினைவுகூர்ந்தார்.

புலம்பெயர் தொழிலாளர்களைப் பொறுத்தவரை, வெறும் விதிமுறைகளை மட்டும் அடிப்படையாகக் கொள்ளாமல், உரிமைகளை முக்கியமாகக் கொண்ட கலாச்சாரத்தை நோக்கி மாற வேண்டியதன் அவசியம் குறித்து நீதிபதி ராமசுப்பரமணியன் வலியுறுத்தினார். மாநிலங்களுக்கு இடையேயான ஒருங்கிணைப்பு, சமூக பாதுகாப்பு வசதிகள், தொழிலாளர் சட்டங்களை மேலும் வலுவாக நடைமுறைப்படுத்துதல் குறித்தும் அவர் வலியுறுத்தினார்.

கட்டுமானம், உணவகங்கள், வர்த்தகம், மற்றும் வீட்டு வேலைகளில் ஈடுபட்டுள்ள புலம்பெயர் தொழிலாளர்கள் மீது உடனடி கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2260515&reg=3&lang=1

-----

SS/IR/KPG/EA


(வெளியீட்டு அடையாள எண்: 2260749) வருகையாளர் எண்ணிக்கை : 9
இந்த வெளியீட்டை படிக்க: Urdu , English , Gujarati , हिन्दी