ரெயில்வே அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஜம்மு ஸ்ரீநகர் இடையேயான வந்தே பாரத் விரைவு ரயில் சேவை தொடங்கப்பட்ட முதல் 10 நாட்களில் 45000 பேர் பயணித்துள்ளனர்

இடுகை இடப்பட்ட நாள்: 12 MAY 2026 4:44PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி கடந்த 2025-ம் ஆண்டு ஜூன் 6-ம் தேதி உதம்பூர் – ஸ்ரீநகர் – பாரமுல்லா இடையேயான 272 கிமீ தொலைவிலான வரலாற்றுச் சிறப்புமிக்க ரயில் சேவையை தொடங்கி வைத்தது அப்பகுதிக்கு பெரும் திருப்புமுனையாக அமைந்தது.  2026-ம் ஆண்டு ஏப்ரல் 30-ம் தேதி மத்திய ரயில்வே அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ், கூடுதல் பெட்டிகளுடன் (20 பெட்டிகள்)   மேம்படுத்தப்பட்ட ஜம்முதாவி – ஸ்ரீநகர் வந்தே பாரத் விரைவு ரயில் சேவையை கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். இந்த ரயில் சேவை, மே 2-ம் தேதி முதல் மக்கள் பயன்பாட்டிற்காக இயக்கப்பட்டதிலிருந்து 10 நாட்களுக்குள் மே 11 வரை மொத்தம் 44,727 பயணிகளை கையாண்டுள்ளது.

இந்த ரயில் சேவைகள் புதன்கிழமை தவிர பிற வேலைநாட்களில் இயக்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் ஜம்முகாஷ்மீர் வழித்தடத்தில் வாரத்திற்கு 5 நாட்கள் வரை நான்கு ரயில் சேவைகள் இயக்கப்பட்டு வருகிறது. மேலும் பிரதி செவ்வாய் கிழமை  மற்றும் புதன்கிழமைகள் தோறும் இரண்டு ரயில் சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றன. இவை அப்பகுதியில் வசிக்கும் மக்கள், சுற்றுலா பயணிகள், யாத்ரீகர்கள் மற்றும் வர்த்தகர்கள் என அனைவருக்கும் இருவழிப்பயண வசதியை வழங்குகின்றன.

இப்பகுதியில் ரயில் பயணம் மேற்கொள்வது போக்குவரத்து ரீதியாக மிகவும் சவாலானது என்று கருதப்பட்டு வந்த நிலையில்,  சுற்றுலாப் பயணிகள் வந்தே பாரத் ரயிலை வசதியான இருக்கைகளில் அமர்ந்தபடியே செனாப் மற்றும் அஞ்சி நதிகளின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள பொறியியல் அற்புதங்களுடன் கூடிய பாலங்களை ரசித்தபடியே கூடுதல் பயண அனுபவத்தைப் பெற்று வருகின்றனர். இந்த ரயில் மைனஸ் 20 டிகிரி செல்சியஸ் வரையிலான மிகக் குறைந்த வெப்பநிலையிலும் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட:டுள்ளது. இதன் காரணமாக கடும் பனிப்பொழிவு மற்றும் நிலச்சரிவு காரணமாக தேசிய நெடுஞ்சாலை பல நாட்களுக்கு மூடப்படும் சூழலில் அனைத்துப் பருவநிலைகளிலும் நம்பகத் தன்மையுடன் கூடிய முக்கிய போக்குவரத்து அமைப்பாக இந்த வந்தே பாரத் ரயில் சேவை அமைந்துள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:  https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2260293&reg=3&lang=1

 

****

TV/SV/KPG/SH

 


(வெளியீட்டு அடையாள எண்: 2260389) வருகையாளர் எண்ணிக்கை : 13
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Punjabi , Gujarati , Odia , Kannada