அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
தற்சார்பு மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த வளர்ச்சியை உறுதி செய்வதில் அரசின் நடவடிக்கைகள்
இடுகை இடப்பட்ட நாள்:
12 MAY 2026 10:37AM by PIB Chennai
தேசிய தொழில்நுட்ப தினத்தை குறிக்கும் வகையிலும் தற்சார்பு நிலையை உறுதி செய்யும் வகையிலும் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி குழுமம் பல்வேறு முன்முயற்சிகளை மேறகொண்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக புதுதில்லியில் உள்ள அதன் தலைமையகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் தொழில்நுட்ப பரிமாற்றம் என்ற கருத்தாக்கம் குறித்து விவாதிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் ரூர்க்கியில் உள்ள மத்திய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் உருவாக்கிய 13 உள்நாட்டு தொழில்நுட்பங்கள் தொழில்துறை உட்பட பல்வேறு புத்தொழில் நிறுவனங்களுக்கும் பரிமாற்றம் செய்யப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் வரவேற்புரையாற்றிய மத்திய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த டாக்டர் அஜய் சௌராசியா, நாட்டில் புதுமை சார்ந்த வளர்ச்சியை விரைவுபடுத்துவதில் தொழில்துறைக்கு தேவையான தொழில்நுட்ப பரிமாற்றத்தின் அவசியம் குறித்து எடுத்துரைத்தார்.
இதனையடுத்து பேசிய அந்நிறுவனத்தின் இயக்குநர், பேராசிரியர் ஆர் பிரதீப் குமார், மத்திய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் தொழில்துறை சார்ந்த சாதனைகள் மற்றும் சமூகத்திற்கு பயனுள்ள கண்டுபிடிப்புகள் குறித்து எடுத்துரைத்தார். தேசிய தொழில்நுட்ப தினத்தில் இத்தகைய தொழில்நுட்ப பரிமாற்றம் சார்ந்த நிகழ்ச்சி நாட்டின் ஆராய்ச்சிக்கான சூழல் அமைப்பை வலுப்படுத்த உதவிடும் என்று அவர் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியின் போது மத்திய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் உருவாக்கியுள்ள 13 தொழில்நுட்பங்கள் பல்வேறு தொழில்துறையினர் மற்றும் புத்தொழில் நிறுவனங்களுக்கு பரிமாறப்பட்டன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2260122®=3&lang=1
***
SS/SV/RJ/PD
(வெளியீட்டு அடையாள எண்: 2260263)
வருகையாளர் எண்ணிக்கை : 6