பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
செஷல்ஸ் குடிமைப் பணியாளர்களுக்கான முதலாவது திறன் மேம்பாட்டுத் திட்டம் முசோரியில் தொடங்குகிறது
இடுகை இடப்பட்ட நாள்:
12 MAY 2026 10:19AM by PIB Chennai
முசோரியில் உள்ள சிறந்த நிர்வாகத்திற்கான தேசிய மையம், செஷல்ஸ் குடிமைப் பணியாளர்களுக்கான முதலாவது திறன் மேம்பாட்டுத் திட்டத்தை இன்று தொடங்கியது. வெளியுறவு அமைச்சகத்தின் ஒருங்கிணைப்புடன் 2026 மே 11 முதல் மே 22 வரை இரண்டுவார காலம் இப்பயிற்சி நடைபெறுகிறது. இதில் பாதுகாப்பு, தகவல் தொழில்நுட்பம், நிதி, நீதித்துறை, கல்வி, பொது நிர்வாகம், அதிபர் அலுவலகம் ஆகியவற்றின் தலைமை இயக்குநர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் 29 பேர் கலந்து கொண்டுள்ளனர்.
இத்திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் சிறந்த நிர்வாகத்திற்கான தேசிய மையம் செஷல்சின் பொதுச் சேவை அமைப்புகளிடையே 2026 பிப்ரவரியில் கையெழுத்தானது. இந்த 3 ஆண்டுகால ஒப்பந்தத்தின் மூலம், தலைமைத்துவத்தை வலுப்படுத்துவது டிஜிட்டல் மாற்ற நடவடிக்கையை விரைவுபடுத்துவது ஆகியவற்றை கவனத்தில் கொண்டு 250 செஷல்ஸ் குடிமைப்பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்க விரிவான வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதற்கான தொடக்க நிகழ்ச்சியில், சிறந்த நிர்வாகத்திற்கான தேசிய மையத்தின் தலைமை இயக்குநர் டாக்டர் சுரேந்திர குமார் பாக்டே தலைமை தாங்கினார்.
பயிற்சியில் கலந்து கொண்டுள்ள 29 உறுப்பினர் பிரதிநிதிகளை வரவேற்ற அவர், செஷல்ஸ் நாட்டின் துறைகளுக்கேற்ற வகையில் இப்பயிற்சித் திட்டம் வடிமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2260114®=3&lang=1
**
SS/IR/KPG/PD
(வெளியீட்டு அடையாள எண்: 2260261)
வருகையாளர் எண்ணிக்கை : 10