பிரதமர் அலுவலகம்
குஜராத்திலுள்ள சோம்நாத்தில் சர்தார் வல்லபாய் படேலுக்கு பிரதமர் மரியாதை செலுத்தினார்
प्रविष्टि तिथि:
11 MAY 2026 3:55PM by PIB Chennai
குஜராத்திலுள்ள சோம்நாத்தில் சர்தார் வல்லபாய் படேலுக்கு, பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று மரியாதை செலுத்தினார்.
சர்தார் படேலின் தொலைநோக்குப் பார்வை குறித்தும், சோம்நாத் கோவில் மறுகட்டுமானத்தில் அவரது தீர்க்கமான பங்களிப்புக் குறித்தும் பிரதமர் குறிப்பிட்டார்.
இந்தியாவின் நாகரிகப் பெருமை மற்றும் ஆன்மீகத் தொடர்ச்சியின் சின்னமாக, சோமநாத் எழுச்சி அதன் முழுப் பெருமையுடன் மீண்டும் எழுவதைக் காண்பதே சர்தார் படேலின் கனவாக இருந்தது என்று திரு மோடி சுட்டிக்காட்டினார். மேலும், நாட்டிற்கான சர்தார் படேலின் தொலைநோக்குப் பார்வையை நிறைவேற்றுவதில் நாடு என்றும் உறுதிபூண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளப் பதிவில் பிரதமர் எழுதியிருப்பதாவது:
“சோம்நாத்தில், கோவிலின் மறுகட்டுமானத்தில் தொலைநோக்குப் பார்வையுடன் தீர்க்கமான பங்களிப்புச் செய்த சர்தார் வல்லபாய் படேலுக்கு மனப்பூர்வமாக மரியாதை செலுத்தினேன். இந்தியாவின் நாகரிகப் பெருமை மற்றும் ஆன்மீகத் தொடர்ச்சியின் சின்னமாக, சோமநாத் எழுச்சி அதன் முழுப் பெருமையுடன் மீண்டும் எழுவதைக் காண்பதே அவரது கனவாக இருந்தது.
நமது நாட்டிற்கான அவரது தொலைநோக்குப் பார்வையை நிறைவேற்றுவதில் நாம் என்றும் உறுதிபூண்டுள்ளோம்.”
---
(Release ID: 2259793)
SS/IR/KPG/SH
(रिलीज़ आईडी: 2259979)
आगंतुक पटल : 43
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Bengali-TR
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam