பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஆபரேஷன் சிந்தூர் – மே 7 முதல் மே 10 வரை 88 மணி நேர நினைவு ஓட்டம்

प्रविष्टि तिथि: 11 MAY 2026 12:42PM by PIB Chennai

இந்திய விமானப்படை 88 மணி நேர ஆபரேஷன் சிந்தூர் நினைவு ஓட்டத்தை மே 7 முதல் மே 10 வரை புதுதில்லியில் நடத்தியது. ஆபரேஷன் சிந்தூரின் 88 மணி நேர வெற்றிகரமான வான் தாக்குதல் நடவடிக்கையின் முதலாம் ஆண்டு நிறைவையொட்டி இந்நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இந்திய விமானப்படை மற்றும் இந்திய ராணுவத்தின் அனைத்துப் பிரிவுகளைச் சேர்ந்த 600 பேர் கலந்து கொண்டனர்.

புதுதில்லி இந்தியா கேட்டில் மே 7 அன்று நள்ளிரவு 1.05 மணிக்கு தொடங்கிய இந்த ஓட்டம் விமானப்படை தளத்தில் மே 10 அன்று மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது.

தொடர் ஓட்டம் முறையில் 88 மணி நேரங்கள் இந்த ஓட்டம் நடைபெற்றது. தன்னார்வலர்களும் இதில் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சி நிறைவடைந்தவுடன் மே 10 அன்று நேரு பூங்காவில் 6.30 மணி முதல் 8 மணி வரை  இந்திய விமானப்படையின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2259727&reg=3&lang=1

-----

SS/IR/KPG/SH


(रिलीज़ आईडी: 2259976) आगंतुक पटल : 50
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Bengali , Bengali-TR , Malayalam