பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஆயுதப் படைக்கான கண்மருத்துவ மாநாட்டை பாதுகாப்புத்துறை இணையமைச்சர் தொடங்கி வைத்தார்

இடுகை இடப்பட்ட நாள்: 09 MAY 2026 5:59PM by PIB Chennai

ஆயுதப் படைக்கான கண்மருத்துவ மாநாட்டை பாதுகாப்புத்துறை இணையமைச்சர் சஞ்சய் சேத் புது தில்லியில் தொடங்கி வைத்தார்.

ராணுவ மருத்துவமனை, அகில இந்திய கண் மருத்துவ சங்கம்  இணைந்து நடத்திய இந்த இரண்டு நாள் மாநாட்டில், இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த கண் மருத்துவ நிபுணர்கள் கலந்து கொண்டனர்.

இந்திய கண் மருத்துவர்கள் உலகத் தரத்தில் சிறப்பாக செயல்பட்டு வருவதாக அமைச்சர் பாராட்டினார். ஆயுதப்படை மருத்துவ சேவைகள் தொலைதூர மற்றும் எல்லைப் பகுதிகளில் கண் சிகிச்சை முகாம்கள் நடத்தி ஆயிரக்கணக்கான மக்களுக்கு கண்ணொளி வழங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், ராணுவ மருத்துவமனையில்  புதியதாக தொடங்கப்பட்ட நவீன கண் சிகிச்சை மையத்தை அவர் பாராட்டினார். நிகழ்ச்சியில் சர்வதேச புகழ்பெற்ற கண் மருத்துவ நிபுணர்களும் கவுரவிக்கப்பட்டனர்.

இந்த விழாவில் பாதுகாப்புத் துறையின் மூத்த அதிகாரிகள் மற்றும் ஆயுதப்படை தலைவர்கள் கலந்து கொண்டனர்.

(Release ID: 2259404)

****

TV/PKV/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2259447) வருகையாளர் எண்ணிக்கை : 7
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Marathi