ஊரக வளர்ச்சி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கிராமப்புறச் சாலை இணைப்பு ரூ 18,907 கோடி நிதி ஒதுக்கீட்டில் வலுப்படுத்தப்படும்-மத்திய அமைச்சர் திரு சிவராஜ் சிங்

இடுகை இடப்பட்ட நாள்: 09 MAY 2026 3:49PM by PIB Chennai

பிரதமரின் கிராமப்புறச் சாலைத் திட்டத்தின் 25 ஆண்டுகள் நிறைவைக் குறிக்கும் வெள்ளி விழா கொண்டாட்டங்களும், இத்திட்டத்தின் நான்காவது கட்டத்தின் தேசியத் தொடக்க விழாவும் மே 10 அன்று மத்தியப் பிரதேசத்தின் செஹோர் மாவட்டத்தில் உள்ள பைருண்டாவில் நடைபெறவுள்ளன.

இது கிராமப்புற இந்தியாவின் வளர்ச்சிக்கு ஒரு முக்கிய நடவடிக்கையாக அமைகிறது. கிராமப்புறங்களில் உறுதியான, அனைத்து பருவநிலைகளுக்கும் ஏற்ற தார்ச் சாலைகள் மூலம், சாலை கட்டமைப்புகள் வலுப்படுத்தப்பட வேண்டியதன் அவசியம் குறித்து எடுத்துரைக்கும் நிகழ்ச்சி, மத்திய வேளாண் துறை அமைச்சர் திரு சிவராஜ் சிங் சவுகான் தலைமையில் நடைபெறுகிறது. இதில், மத்தியப் பிரதேச முதலமைச்சர் டாக்டர் மோகன் யாதவ் இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார்.

இந்நிகழ்ச்சி அரசு நிகழ்ச்சியாக மட்டுமின்றி, கிராமப்புற மாற்றங்கள், சமூக உள்ளடக்கம் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளின் விரிவாக்கப் பணிகளின் மூலம், தொலைதூர பகுதிகளில் வசிக்கும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கான உறுதிப்பாட்டைப் பறைசாற்றும் ஒரு பிரம்மாண்டமான கொண்டாட்டமாகவும் முன்னிறுத்தப்படுகிறது.

இந்நிகழ்ச்சியின் போது, மத்தியப் பிரதேச மாநிலத்தில் மொத்தம் 2,117 கிலோமீட்டர் நீளமுள்ள 973 சாலைகளுக்காக, பிரதமரின் கிராமப்புறச் சாலைத் திட்டத்தின் கீழ், வழங்கப்படவுள்ள ஒப்புதல் கடிதங்களையும், நிதி ஒதுக்கீடுகளையும் மத்திய அமைச்சர் திரு சிவராஜ் சிங் சவுகான், அம்மாநில முதலமைச்சர் டாக்டர் மோகன் யாதவிடம் வழங்குவார். இத்திட்டங்கள் மாநிலம் முழுவதும் உள்ள 987 குடியிருப்புகளுக்குப் பயனளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவற்றுடன் சேர்த்து, பிரதமரின் ஜன்மன் முன்முயற்சியின் கீழ், 384 கிலோமீட்டருக்கும் அதிகமான சாலைத் திட்டங்களுக்கும், ஒப்புதல் அளிக்கப்படவுள்ளது. இது 168 பின்தங்கிய குடியிருப்புகளுக்கு, நேரடியாகப் பயனளிக்கும்.

இந்நிகழ்ச்சியின் போது, 2026-27-ம் நிதியாண்டிற்கான பிரதமரின் கிராமப்புறச் சாலைத் திட்டத்திற்கு ரூ 18,907 கோடி நிதி ஒதுக்கீடு குறித்த அறிவிப்பை திரு சிவராஜ் சிங் சவுகான் வெளியிடுவார். இதில், மத்தியப் பிரதேச மாநிலத்தின் வளர்ச்சிக்காக ரூ 830 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2259358&reg=3&lang=1

 

 (Release ID: 2259358)

****

TV/SV/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2259383) வருகையாளர் எண்ணிக்கை : 6
இந்த வெளியீட்டை படிக்க: English , हिन्दी , Gujarati