சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் சார்ந்த சுகாதார ஒப்பீட்டுத் தளத்தை உருவாக்குவதில் வளரும் நாடுகளிடையே இந்தியா முதலிடம்: தேசிய சுகாதார ஆணையத் தலைமைச் செயல் அதிகாரி

இடுகை இடப்பட்ட நாள்: 08 MAY 2026 3:53PM by PIB Chennai

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம்தேசிய சுகாதார ஆணையம்இந்திய செயற்கை நுண்ணறிவு இயக்கம் மற்றும் பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் கழகம் ஆகியவற்றுடன் இணைந்துஆயுஷ்மான் பாரத்-பிரதமரின் மக்கள் சுகாதாரத் திட்டத்தின்,  தானியங்கி தீர்ப்பளிப்பு ஹேக்கத்தான் ஷோகேஸ் 2026-ஐ இன்று தொடங்கியது. இத்திட்டத்தின் கீழ்சுகாதார காப்பீட்டு உரிமை கோரல்களுக்கான நிர்வாக நடைமுறைகளை வலுப்படுத்த செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் கவனம் செலுத்துவது குறித்த இரண்டு நாள் தேசிய நிகழ்வு நடைபெற்றது.

காப்பீட்டு உரிமை கோரல் தொடர்பான செயல்திறன்வெளிப்படைத்தன்மை மற்றும் நேர்மையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டஅதிநவீன செயற்கை நுண்ணறிவு சார்ந்த தீர்வுகள் குறித்து விவாதிப்பதற்கும்செயல்விளக்கம் அளிப்பதற்கும் கொள்கை வகுப்பாளர்கள்தொழில்நுட்பப் புத்தாக்கப் பணிகளில் ஈடுபடுபவர்கள்காப்பீட்டாளர்கள்மூன்றாம் தரப்பு நிர்வாகிகள்சுகாதார வழங்குநர்கள்கல்வித்துறையினர் மற்றும் செயற்கை நுண்ணறிவு புத்தொழில் நிறுவனங்கள் ஆகியவற்றை ஒன்றிணைக்கிறது.

இந்த நிகழ்ச்சியில் பேசிய தேசிய சுகாதார ஆணையத்தின் தலைமைச் செயல் அதிகாரி டாக்டர் சுனில் குமார் பர்ன்வால்இந்த முயற்சி ஆயுஷ்மான் பாரத் பிரதமரின் மக்கள் சுகாதாரத் திட்டத்தின் கீழ்சுகாதார சேவையை வலுப்படுத்துவது மட்டுமின்றிதொழில்நுட்பத்தின் மூலம் சுகாதாரச் சூழலமைப்பின் ஒட்டுமொத்த செயல்திறனையும்அதன் பயன்களை மேம்படுத்துவதற்கும் ஒரு குறிப்பிடத்தக்க வாய்ப்பை வழங்குகிறது என்று குறிப்பிட்டார்.

பெரு நிறுவனங்கள்கல்வித்துறைபுத்தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழில்துறை என அனைத்து துறைகளிலும் புத்தாக்க நடவடிக்கைகள்  பரவியுள்ளது என்றும்ஹேக்கத்தான் போன்ற முயற்சிகள்சிக்கலான சுகாதார சவால்களுக்குத் தீர்வு காண்பதற்கு இத்தகைய தொழில்நுட்பத்தை பயன்படுத்திக்கொள்ள உதவுகின்றன என்றும் அவர் வலியுறுத்தினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2259047&reg=3&lang=1

***

SS/SV/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2259164) வருகையாளர் எண்ணிக்கை : 5
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , हिन्दी , Kannada