ஊரக வளர்ச்சி அமைச்சகம்
மக்களை மையமாகக் கொண்ட நில மேலாண்மை நடைமுறைகளைப் பின்பற்ற நிலத்தொகுப்பு முன்முயற்சி உதவும்- மத்திய அமைச்சர் திரு சிவ்ராஜ் சிங் சௌகான்
இடுகை இடப்பட்ட நாள்:
08 MAY 2026 3:56PM by PIB Chennai
மத்திய ஊரக வளர்ச்சி மற்றும் வேளாண் துறை அமைச்சர் திரு சிவ்ராஜ் சிங் செளகான், ஊரக வளர்ச்சித்துறையின் கீழ் உள்ள நிலவளத்துறை செயல்பாடுகள் குறித்து புதுதில்லியில் இன்று (08.05.2026) நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்றார். இதில் நிலவளத்துறையின் செயலாளர் திரு நரேந்திர பூஷனும் உயர் அதிகாரிகளும் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில் நிலவளத்துறை சார்பில் மேற்கொள்ளப்படும் பல்வேறு முன்முயற்சிகள், சீர்திருத்தங்கள் ஆகியவற்றின் முன்னேற்றம் குறித்து அதிகாரிகள் அமைச்சருக்கு எடுத்துரைத்தனர். டிஜிட்டல் இந்தியா நிலப்பதிவுகள் நவீனமயமாக்கல் திட்டத்தின் முன்னேற்றம் குறித்தும் இதில் விவாதிக்கப்பட்டது. டிஜிட்டல் இந்தியா நிலப்பதிவுகள் நவீனமயமாக்கல் திட்டமானது, நாடு முழுவதும் உள்ள நிலம் தொடர்பான பதிவுகளை, டிஜிட்டல் மயமாக்குவதை நோக்கமாக் கொண்டுள்ளது என்றார்.
இந்த ஆய்வுக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் திரு சிவ்ராஜ் சிங் சௌகான், இந்த நவீன மயமாக்கல் முயற்சிகள் மக்களை மையமாகக் கொண்டதாக அமைய வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். அதற்கு நிலத்தொகுப்பு முன்முயற்சி உதவும் என்று அவர் தெரிவித்தார். மத்திய நிலவளத்துறை சார்பில் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களை விரைந்து நிறைவேற்றுவது குறித்து மாநில அமைச்சர்களுடன் விரைவில் ஆலோசனை நடத்தவிருப்பதாகவும் திரு சிவ்ராஜ் சிங் செளகான் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2259050®=3&lang=1
***
SS/PLM/KPG/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2259133)
வருகையாளர் எண்ணிக்கை : 9