அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
அறிவியல், தொழில்நுட்பம், கண்டுபிடிப்புத் துறைகளில் இந்தியாவும் வியட்நாமும் இணைந்து செயல்பட முடிவெடுத்துள்ளன
இடுகை இடப்பட்ட நாள்:
07 MAY 2026 4:00PM by PIB Chennai
மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் இன்று புது தில்லியில் வியட்நாமின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் டாக்டர் வு ஹை குவான் உடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள், கண்டுபிடிப்புகள், ஆராய்ச்சி, புத்தொழில் கட்டமைப்புகளில் ஒத்துழைப்பை மேம்படுத்த இரு தரப்பும் ஒப்புக்கொண்டன. இந்தியாவின் 'கிழக்கு நோக்கிய கொள்கை', இந்தோ-பசிபிக் தொலைநோக்குப் பார்வை ஆகியவற்றில் வியட்நாம் ஒரு முக்கிய பங்களிப்பு நாடாகத் திகழ்கிறது என்று குறிப்பிட்ட அமைச்சர், அறிவியல், தொழில்நுட்பம், கண்டுபிடிப்புகளில் இந்தியா-ஆசியான் இடையே மேற்கொள்ளப்பட்டு வரும் கூட்டு ஆராய்ச்சி, கண்டுபிடிப்புகள், தொழில்நுட்பம் சார்ந்த வளர்ச்சிக்கு வலுவான அடித்தளத்தை வழங்குகிறது என்று கூறினார். தற்போதைய இந்த ஈடுபாடு, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் முன்னணித் துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான ஒரு முக்கிய வாய்ப்பை வழங்குகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் இரு நாடுகளுக்கும் இடையே வளர்ந்து வரும் ஒத்துழைப்பை வரவேற்ற வு ஹை குவான், நடைமுறை பயன்பாடுகள், சமூக நலன்களைக் கொண்ட தொழில்நுட்பங்களில் முறையான ஒத்துழைப்பை வளர்ப்பதில் வியட்நாம் ஆர்வமாக உள்ளது என்று தெரிவித்தார். இருதரப்பு முன்முயற்சிகளை வலுப்படுத்த வழக்கமான ஒருங்கிணைப்புடன் கூடிய ஒரு உறுதியான செயல் திட்டத்தைத் தயாரிப்பதற்காக இரு அமைச்சகங்களிலிருந்தும் சிறப்பு அதிகாரிகளை நியமிக்க அவர் முன்மொழிந்தார். இந்த விவாதங்களின் போது, செயற்கை நுண்ணறிவு சார்ந்த பணிகள், இணைய பாதுகாப்பு கட்டமைப்புகள், கண்டுபிடிப்பு சூழல் அமைப்புகள், தொழில்நுட்பப் பரிமாற்ற முயற்சிகள் ஆகியவற்றில் ஒத்துழைத்து செயல்படுவது குறித்து இரு தரப்பும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2258711®=3&lang=1
***
TV/PD/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2258834)
வருகையாளர் எண்ணிக்கை : 7