தேர்தல் ஆணையம்
azadi ka amrit mahotsav

மேற்கு வங்கத்தில் கூடுதல் வாக்கு எண்ணிக்கை கண்காணிப்பாளர்களையும் காவல்துறை பார்வையாளர்களையும் தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது

இடுகை இடப்பட்ட நாள்: 02 MAY 2026 3:53PM by PIB Chennai

2026-ம் ஆண்டு மேற்கு வங்க சட்டமன்றத்திற்கான பொதுத் தேர்தலை முன்னிட்டு, வாக்கு எண்ணிக்கை கண்காணிப்பாளர்களுக்கு உதவுவதற்காக 165 கூடுதல் கண்காணிப்பாளர்களையும் , வாக்கு எண்ணும் மையங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பை வலுப்படுத்தவும், சட்டம், ஒழுங்கு ஏற்பாடுகளை மேற்பார்வையிடவும் 77 காவல் பார்வையாளர்களையும் தேர்தல் ஆணையம் பணியில் அமர்த்தியுள்ளது.

 

வாக்கு எண்ணிக்கை நடவடிக்கைகள் பாதுகாப்பான, அமைதியான, அச்சுறுத்தலற்ற, வெளிப்படையான சூழலில் நடைபெறுவதை உறுதி செய்வதற்காக, கூடுதல் வாக்கு எண்ணிக்கை பார்வையாளர்களும் காவல்துறை பார்வையாளர்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் .

 

இந்திய அரசியல் சாசனத்தின் 324-வது பிரிவு, 1951-ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 20பி பிரிவு ஆகியவற்றின் கீழ் தேர்தல் ஆணையத்திற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி இந்த நியமனங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்தக் காலகட்டத்தில், பார்வையாளர்கள் ஆணையத்தின் பணிகளுக்காகப் பணிமாற்றத்தில் இருப்பதாகக் கருதப்படுவார்கள். அவர்கள் அதன் தேர்தல் ஆணையத்தின் மேற்பார்வையிலும் கட்டுப்பாட்டின் கீழும் செயல்படுவார்கள்.

 

ஒன்றுக்கு மேற்பட்ட வாக்கு எண்ணும் அரங்கங்களைக் கொண்ட 165 சட்டமன்றத் தொகுதிகளுக்கு, வாக்கு எண்ணும் கண்காணிப்பாளர்களுக்கு உதவுவதற்காகக் கூடுதல் வாக்கு எண்ணும் கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் .

 

காவல் பார்வையாளர்கள், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட சட்டமன்றத் தொகுதிகளின் வாக்கு எண்ணும் மையங்களைச் சுற்றியுள்ள பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு ஏற்பாடுகளை மேற்பார்வையிடுவார்கள். மேலும், வாக்கு எண்ணும் மையங்களைச் சுற்றியுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் ஆணையத்தின் அறிவுறுத்தல்களின்படி இருப்பதை உறுதி செய்வார்கள். இருப்பினும், வாக்குகள் எண்ணப்படும் நாளன்று, எந்தச் சூழ்நிலையிலும் காவல் பார்வையாளர்கள் வாக்கு எண்ணும் மையத்திற்குள் நுழையக் கூடாது.

 

காவல்துறைப் பார்வையாளர்கள், வாக்கு எண்ணிக்கைப் பார்வையாளர்களுடனும் வாக்கு எண்ணிக்கைப் பணிக்காகப் பணியமர்த்தப்பட்ட பிற தேர்தல் அமைப்புகளுடனும் நெருங்கிய ஒருங்கிணைப்பில் செயல்படுவார்கள்.

 

தேர்தல் அதிகாரிகள், வாக்கு எண்ணிக்கை பணியாளர்கள், வேட்பாளர்கள், அவர்களது முகவர்கள் ஆகியோருக்கான அடையாள அட்டைகள், தேர்தல் அதிகாரியால் (RO) இசிஐநெட் (ECINet) தளத்தில் ஒரு பிரத்யேக பிரிவு மூலம் வழங்கப்படும் .

 

வாக்கு எண்ணும் பணியாளர்கள், வேட்பாளர்கள், அவர்களது முகவர்கள் ஆகியோருக்கு, வாக்கு எண்ணிக்கை அதிகாரியால் இசிஐநெட் (ECINET) தளம் மூலம் வழங்கப்படும் க்யூஆர் குறியீடு அடிப்படையிலான புகைப்பட அடையாள அட்டையின் அடிப்படையில் மட்டுமே வாக்கு எண்ணும் மையங்களுக்குள் நுழைவு கண்டிப்பாக அனுமதிக்கப்படும்.

 

வாக்கு எண்ணிக்கை கண்காணிப்பாளர், தேர்தல் அதிகாரி ஆகியோரைத் தவிர வேறு எவரும் வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் கைப்பேசியை எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

 

கட்டுப்பாட்டுப் பிரிவுகளிலிருந்து பெறப்பட்ட வாக்கு எண்ணிக்கை முடிவுகளைக் கொண்ட படிவம் 17சி-II, வாக்கு எண்ணிக்கை முகவர்கள் முன்னிலையில் வாக்கு எண்ணிக்கை மேற்பார்வையாளர்களால் தயாரிக்கப்பட்டு, அவர்களின் கையொப்பங்களுக்காக அவர்களுடன் பகிரப்படும். முகவர்கள் விரும்பினால், இந்தச் செயல்முறை மீண்டும் செய்யப்படும்.

 

ஒவ்வொரு மேசையிலும் பணியமர்த்தப்பட்ட நுண் கண்காணிப்பாளர்கள், கட்டுப்பாட்டு மைய (சியு) திரையில் இருந்து வரும் முடிவைத் தனித்தனியாகக் குறித்துக்கொண்டு, ஒவ்வொரு சுற்றின் முடிவிலும் சரிபார்ப்புக்காக வாக்கு எண்ணிக்கைக் கண்காணிப்பாளரிடம் ஒப்படைப்பார்கள்.

 

(Release ID: 2257485)

****

TV/PLM/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2257539) வருகையாளர் எண்ணிக்கை : 13
இந்த வெளியீட்டை படிக்க: English , Gujarati , Urdu , हिन्दी , Bengali , Malayalam