பெட்ரோலியம் மற்றம் இயற்கை எரிவாயு அமைச்சகம்
மேற்கு ஆசியாவில் நிலவும் சூழலின் அடிப்படையில் முக்கியத் துறைகளின் நிலவரம் குறித்த தற்போதைய தகவல்கள்
இடுகை இடப்பட்ட நாள்:
01 MAY 2026 6:29PM by PIB Chennai
மேற்கு ஆசியாவில் நிலவி வரும் சூழலைக் கருத்தில் கொண்டு, ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் மூலம் முக்கியத் துறைகளின் தயார்நிலையையும், மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளின் தொடர்ச்சியையும் உறுதி செய்வதில் மத்திய அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. எரிசக்தி விநியோகம், கடல்சார் செயல்பாடுகள், மேற்கு ஆசிய பிராந்தியத்தில் உள்ள இந்தியர்களுக்கு ஆதரவு அளிக்கவும் விதமாகவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், தடையற்ற எரிபொருள் விநியோகத்தை உறுதி செய்ய எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்த தற்போதைய நிலவரத்தை பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
வணிகம், தொழில்துறை சார்ந்த, பிரீமியம் பிரிவுகளுக்கான ஒரு சில தயாரிப்புகளுக்கு மட்டும், சர்வதேச நிலவரத்திற்கு ஏற்ப எண்ணெய் நிறுவனங்கள் விலையை மாற்றியமைத்துள்ளன. பெட்ரோல், டீசல், மானிய விலையிலான வீட்டு உபயோக எல்.பி.ஜி சிலிண்டர் (14.2 கிலோ) ஆகியவற்றின் சில்லறை விற்பனை விலையில் எவ்வித மாற்றமும் இன்றி அப்படியே நீடிக்கிறது. நேற்று ஒட்டுமொத்த எண்ணெய் நிறுவனங்களின் அடிப்படையில், ஆன்லைன் மூலமான எல்.பி.ஜி சிலிண்டர் முன்பதிவுகள் 98 சதவீதம் வரை அதிகரித்துள்ளன.
சிலிண்டர்கள் பதுக்கப்படுவதைத் தடுக்க, விநியோக அங்கீகாரக் குறியீடு (DAC - Delivery Authentication Code) அடிப்படையிலான விநியோகம் சுமார் 93 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. நுகர்வோரின் பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்ணிற்கு இந்த குறியீடு அனுப்பப்படுகிறது. 30.04.2026 அன்று, சுமார் 41.6 லட்சம் எல்.பி.ஜி சிலிண்டர்கள் முன்பதிவு செய்யப்பட்ட நிலையில், சுமார் 49.8 லட்சம் வீட்டு உபயோக சிலிண்டர்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.
பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களின் வாகனங்களுக்கான எல்.பி.ஜி-யின் சராசரி விற்பனை, ஏப்ரல் 2026-ல் நாளொன்றுக்குச் சுமார் 356 மெட்ரிக் டன் ஆக அதிகரித்துள்ளது. இது 2026 ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் நாளொன்றின் சராசரியாக இருந்த சுமார் 177 மெட்ரிக் டன் விற்பனையுடன் ஒப்பிடும்போது, பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களின் வாகன எல்.பி.ஜி விற்பனை சுமார் 100 சதவீதம் அதிகரித்துள்ளதைப் எடுத்துக்காட்டுகிறது.
2026 மார்ச் முதல், சுமார் 5.88 லட்சம் குழாய் வழி இயற்கை எரிவாயு (பிஎன்ஜி) இணைப்புகளுக்கு எரிவாயு விநியோகம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், கூடுதலாக 2.68 லட்சம் இணைப்புகளுக்கான உள்கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்பட்டு, மொத்த இணைப்புகளின் எண்ணிக்கை 8.56 லட்சமாக உயர்ந்துள்ளது. மேலும், சுமார் 6.60 லட்சம் வாடிக்கையாளர்கள் புதிய இணைப்புகளுக்காகப் பதிவு செய்துள்ளனர். 30.04.2026 வரை, சுமார் 43,200 குழாய் வழி இயற்கை எரிவாயு இணைப்பு வசதி உள்ள நுகர்வோர் MYPNGD.in இணையதளம் வாயிலாகத் தங்களது எல்பிஜி இணைப்புகளைத் திரும்ப ஒப்படைத்துள்ளனர்.
2026-ல் பிப்ரவரி மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட 5 கிலோ எஃப்.டி.எல் சிலிண்டர்களின் மொத்த எண்ணிக்கை சுமார் 21.7 லட்சமாகும். எனினும், ஏப்ரல் மாதத்தில், 22.54 லட்சத்திற்கும் அதிகமான 5 கிலோ எஃப்.டி.எல் சிலிண்டர்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. நேற்று மட்டும் 79,000-க்கும் அதிகமான 5 கிலோ எஃப்.டி.எல் சிலிண்டர்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.
கப்பல் போக்குவரத்து தலைமை இயக்குநரகத்தின் கட்டுப்பாட்டு அறை செயல்பாட்டுக்கு வந்ததில் இருந்து இதுவரை 8,268 அழைப்புகளையும், 17,694-க்கும் அதிகமான மின்னஞ்சல்களையும் கையாண்டுள்ளது. டெஹ்ரானில் உள்ள இந்தியத் தூதரகம், ஈரானில் இருந்த 2,490 இந்தியர்களைத் தரைவழிப் பாதைகள் வழியாக வெளியேறத் தேவையான வசதிகளைச் செய்து கொடுத்துள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2257341®=3&lang=1
***
TV/PD/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2257399)
வருகையாளர் எண்ணிக்கை : 10