பிரதமர் அலுவலகம்
பிரதமர் நாட்டு மக்களுக்குத் தான் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்களைப் பகிர்ந்துள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
18 APR 2026 11:55PM by PIB Chennai
பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்குத் தான் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்களைப் பகிர்ந்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் இந்தியில் வெளியிட்டுள்ள தொடர் பதிவுகளின் வாயிலாக அவர் கூறியுள்ளதாவது.
'மகளிருக்கான இட ஒதுக்கீட்டை எதிர்ப்பதன் மூலம், எதிர்க்கட்சிகள் அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்களின் உணர்வுகளை அவமதித்துள்ளன. நாட்டின் மகளிர் சக்தியின் கண்ணியத்தையும் சுயமரியாதையையும் புண்படுத்தியவர்கள், இனி தாய்மார்கள், சகோதரிகள் மற்றும் மகள்களின் கோபத்திலிருந்து தப்பிக்க முடியாது.'
'மகளிர் இட ஒதுக்கீடு சட்ட திருத்தம், இந்தியப் பெண்களுக்குப் புதிய சிறகுகளை வழங்குவதற்கான ஒரு மகா யாகமாகும். ஆனால் காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சி மற்றும் திமுக போன்ற கட்சிகள் இதனைத் கருவிலேயே அழித்துவிட்டன.'
'மகளிர் இட ஒதுக்கீடு விவகாரத்தில் காங்கிரஸ் தனது பாவங்களுக்குப் பரிகாரம் தேடிக்கொள்ளும் என்று நான் தனிப்பட்ட முறையில் நம்பினேன். ஆனால், காங்கிரஸ் மீண்டும் ஒருமுறை அந்த வாய்ப்பைத் தவறவிட்டுவிட்டது.'
'மகளிர் இட ஒதுக்கீட்டு சட்டத் திருத்தத்தை எதிர்ப்பதற்கான ஒரு முக்கிய காரணம் - வாரிசு அரசியல் செய்யும் கட்சிகளின் பயம்! பெண்கள் அதிகாரம் பெற்றால், தங்கள் தலைமைக்கு ஆபத்து ஏற்படும் என்று அவர்கள் நினைக்கிறார்கள்'
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2253435®=3&lang=1
AD/BR
***
(வெளியீட்டு அடையாள எண்: 2253482)
வருகையாளர் எண்ணிக்கை : 15
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Bengali
,
Bengali-TR
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam