PIB Headquarters
azadi ka amrit mahotsav

இந்தியாவின் பல்முனைப் பேரிடர் அபாய முன்னெச்சரிக்கை முடிவுகளை எடுக்க உதவிடும் கட்டமைப்பு

இடுகை இடப்பட்ட நாள்: 02 APR 2026 11:24AM by PIB Chennai

முக்கிய அம்சங்கள்

பல்முனைப் பேரிடர் அபாய முன்னெச்சரிக்கை முடிவுகளை எடுக்க உதவிடும் கட்டமைப்பு, பல்வேறு பகுதிகளாக பெறப்பட்டு வந்த  முன்கூட்டிய கணிப்புகளை, ஒருங்கிணைந்த தானியங்கி அடிப்படையிலான கணிப்பிற்கு ஒரு முழுமையான டிஜிட்டல் மாற்றத்தை சாத்தியமாக்குகிறது.

பாதிப்பு அடிப்படையில், குறிப்பிட்ட பகுதிகளுக்கான முன்னெச்சரிக்கைகள், தற்போது இந்தியா மற்றும் அண்டை பிராந்தியங்களில் வசித்து வரும் மக்களில் 80% பேரைச் சென்றடைகின்றன.

நிகழ்நேர முன்கணிப்பு மற்றும் பாதிப்பு அடிப்படையிலான எச்சரிக்கைகள், முன்கணிப்பு தயாரிப்பிற்கான கால அவகாசத்தை 50% குறைத்து, அதன் துல்லிய கணக்கீடுகளை 30% மேம்படுத்தியுள்ளன.

இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிடும் மூன்று முதல் ஐந்து  நாட்களுக்கான முந்தைய முன்கணிப்பில், புயல் கரையைக் கடக்கும் இடத்தைத் துல்லியமாகக் கணிப்பதில் ஏற்படும் பிழை, குறைந்ததன் காரணமாக, இந்த புதிய அமைப்பை செயல்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளதன் மூலம் 1999-ம் ஆண்டு முதல் 2024-ம் ஆண்டு வரை, அதற்கானச் செலவுகள், மூன்றில் ஒரு பங்காகக் குறைந்துள்ளன.

 

அறிமுகம்

 

இந்தியா அதன் பன்முகப் புவியியல், நீண்ட கடற்கரை மற்றும் பருவமழையைச் சார்ந்த பருவநிலை ஆகியவற்றின் காரணமாக, புயல், வெள்ளம், வெப்ப அலைகள், வறட்சி மற்றும் நிலச்சரிவுகள் போன்ற பேரிடரை ஏற்படுத்தும் வானிலை நிகழ்வுகளால் பெரிதும் பாதிக்கப்படக் கூடிய தன்மை கொண்ட பகுதியாக அமைந்துள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் மற்றும் மத்திய புவி அறிவியல் அமைச்சகம் வெளியிட்டுள்ள தரவுகளின் அடிப்படையில், இந்தியாவில், ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கான தீவிர வானிலை நிகழ்வுகள் ஏற்படுகின்றன. இவற்றில், வெள்ளப்பெருக்கு மட்டும் 4 கோடி ஹெக்டேர் நிலப்பரப்பிற்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றன. மேலும் கடந்த பத்தாண்டுகளில், வெப்ப அலைகள் அடிக்கடி ஏற்படும் நிகழ்வாக உள்ளன. எரிசக்தி, சுற்றுச்சூழல் மற்றும் நீர் ஆதார அமைப்பின் தரவுகளின் படி, இந்தியாவின் 75%-க்கும் அதிகமான மாவட்டங்கள், பல்வேறு பருவகால அபாயங்களுக்கு உள்ளாகியுள்ளன. அதே சமயம், பேரிடர் தொடர்பான இழப்புகளில், பெரும்பாலானவை புயல் மற்றும் வெள்ளபெருக்கு போன்ற காரணிகளால் மட்டுமே ஏற்படுகின்றன. இந்தச் சூழலில், பல்முனைப் பேரிடர் முன்னெச்சரிக்கை முடிவெடுக்கும் அமைப்பை உருவாக்குவது, சரியான தருணத்தில் மேற்கொள்ளப்படும்  உத்திசார் நடவடிக்கையாகும். ஏனெனில், துல்லியமான முன்னறிவிப்பு மற்றும் ஒருங்கிணைந்த இடர் பகுப்பாய்வு நடவடிக்கைகள் ஆகியவை, பேரிடர் காரணமாக ஏற்படும் இழப்புகளைக் கணிசமான அளவிற்கு  குறைத்து, முன்கூட்டியே மக்களை பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகளிலிருந்து வெளியேற்றுவதற்கும், ஆயத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் வழிவகுத்து, சிக்கலான வானிலை சார்ந்த தரவுகளை அரசுகள், சமூகங்கள் மற்றும் அவசரகால மீட்புப் பணியாளர்களுக்கான, செயல்படுத்தபடக்கூடிய எச்சரிக்கைகளாக மாற்றுவதன் மூலம், பொதுப் பாதுகாப்பு சார்ந்த நடவடிக்கைகளை வலுப்படுத்துகின்றன.

 

பல்முனைப் பேரிடர் அபாய முன்னெச்சரிக்கை முடிவுகளை எடுக்க உதவிடும் கட்டமைப்பின் முக்கிய நோக்கங்கள்

 

பல்முனைப் பேரிடர் அபாய முன்னெச்சரிக்கை முடிவுகளை எடுக்க உதவிடும் கட்டமைப்பு என்பது, இந்திய வானிலை ஆய்வு மையத்தால்  உத்திசார் தொழில்நுட்பம் மற்றும் உள்நாட்டு நிபுணத்துவத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட, மேம்பட்ட டிஜிட்டல் முன்னறிவிப்புத் தளமாகும். வானிலை சார்ந்தத் திட்டத்தின் கீழ்,  குறிப்பிடத்தக்க டிஜிட்டல் மாற்றத்திற்கான முயற்சியாக அறிமுகப்படுத்தப்பட்ட இந்த அமைப்பு, இந்தியாவின் நிகழ்நேர வானிலை கண்காணிப்பு மற்றும் முன்னெச்சரிக்கைத் திறன்களை வலுப்படுத்துகிறது.

 

இந்த அமைப்பு 2024-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில், அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்டது. இது புவியியல் தகவல் அமைப்பு வரைபடங்கள் போன்ற கருவிகளைப் பயன்படுத்தி, நிகழ்நேரத்தில் செயல்படுகிறது. இதன் மூலம், வானிலை தொடர்பான முன்னறிவிப்பாளர்கள், வானிலை தகவல்களை விரைவாகச் சேகரிக்கவும், பகுப்பாய்வு செய்யவும், தெளிவாகவும், பயனருக்கு எளிதாகவும் பரப்ப உதவுகிறது. செயற்கைக்கோள், ரேடார் தரவுகள் உள்ளிட்ட பல்வேறு கண்காணிப்புத் தரவுகளையும், நவீன முன்னறிவிப்புக் கருவிகளையும் ஒருங்கிணைப்பதன் மூலம், இந்த அமைப்பு விரைவான மற்றும் நம்பகத் தன்மையுடன் கூடிய எச்சரிக்கைத் தகவல்களை வழங்குவதுடன், விவசாயிகள், போக்குவரத்து சேவைகள், மீனவர்கள், எரிசக்தி விநியோகஸ்தர்கள் மற்றும் சுற்றுலாத் துறைக்கு, துறை சார்ந்த எச்சரிக்கைத் தகவல்களையும் அளிக்கிறது.

 

இந்தியா முழுவதும் துல்லியமான, நிகழ்நேர மற்றும் பாதிப்பு அடிப்படையிலான, பல்முனைப் பேரிடர் முன்னறிவிப்பை வழங்கக்கூடிய  ஒருங்கிணைந்த மற்றும் உள்நாட்டு முன்னறிவிப்பு அமைப்பை உருவாக்குவதே இதன் நோக்கமாகும். இந்த அமைப்பு, தகவல் பரிமாற்றத்தை மேம்படுத்துவதன் மூலமும், சரியான தருணத்தில், முன்கூட்டிய எச்சரிக்கைகளை வழங்குவதன் மூலமும், முன்னறிவிப்பாளர்கள், முடிவெடுப்பவர்கள் மற்றும் சமூகங்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில், வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தத் திறன்களின் மூலம், பாதிப்பு அடிப்படையிலான முன்னறிவிப்பு மற்றும் இடர் அடிப்படையிலான எச்சரிக்கைகளை இந்த அமைப்பு வழங்குகிறது. இது இந்திய வானிலை ஆய்வு மையத்தின், முன்னறிவிப்பாளர்களுக்கு, சிக்கலான வானிலை தொடர்பான தரவுகளைப் பயனாளர்களுக்குப் பயன்படும் தகவல்களாக மாற்றுவதற்கு உதவுகிறது. இந்த அணுகுமுறை, முன்கூட்டிய எச்சரிக்கைத் தகவல்கள், பல்வேறு துறைகளுக்கும், சமூகங்களுக்கும், எளிதில் கிடைக்கக்கூடியதாகவும், நம்பகத்தன்மை கொண்டதாகவும், பொருத்தமானதாகவும் இருப்பதை உறுதி செய்வதன் மூலம், பேரிடர் தொடர்பான தயார்நிலையை வலுப்படுத்தி, பொதுப் பாதுகாப்பை மேம்படுத்துகிறது.

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2248147&reg=3&lang=1

(Release ID: 2248147)

-------

TV/SV/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2248560) வருகையாளர் எண்ணிக்கை : 12
இந்த வெளியீட்டை படிக்க: English , हिन्दी , Bengali , Gujarati