தேர்தல் ஆணையம்
azadi ka amrit mahotsav

தமிழ்நாடு, புதுச்சேரி, அசாம், கேரளா, மேற்கு வங்கத்தில் வாக்காளர் விழிப்புணர்வு பிரச்சாரம்

இடுகை இடப்பட்ட நாள்: 27 MAR 2026 1:36PM by PIB Chennai

தமிழ்நாடு, அசாம், கேரளா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்ல்தலையொட்டி தேர்தல் ஆணையம் அந்தந்த மாநிலங்களைச் சேர்ந்த தலைமைத் தேர்தல் அதிகாரிகள் மற்றும் மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் இணைந்து வாக்காளர் விழிப்புணர்வு பிரச்சாரத்திற்கான நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது. இந்த ஜனநாயக திருவிழாவை மகிழ்ச்சியான மற்றும் அமைதியான சூழலில் நடத்துவதே இதன் முக்கிய நோக்கமாகும். இத்தகைய முன்முயற்சிகளின் ஒரு பகுதியாக ஜனநாயக நடைமுறைகளில் மக்கள் பங்கேற்பதை ஊக்குவிக்கவும் சுதந்திரமான நேர்மையான மற்றும் திருவிழா போன்ற சூழலில் வாக்களிப்பதை உறுதி செய்யும் வகையிலும் முறையான வாக்காளர் கல்வி மற்றும் தேர்தல் பங்கேற்பு குறித்த பிரமாண்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று ஹவுராவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது போன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்பட்டன.

ஹவுரா மாவட்டத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி சைக்கிள் பேரணியுடன் தொடங்கியது. இதில் ஏராளமான பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், முதல் முறையாக வாக்களிக்கும் இளம் வாக்காளர்கள் உற்சாகத்துடன் பங்கேற்றனர். இந்தப் பேரணியில் தேர்தல் ஆணையம் தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலகம், காவல் துறை ஆணையர், மாவட்ட தேர்தல் அதிகாரி மற்றும் பிற துறைகளைச் சார்ந்த அதிகாரிகளும் பங்கேற்றனர். இப்பேரணி காலை 7 மணிக்கு ஹவுரா பாலத்தில் சோதனைச் சாவடியிலிருந்து கொடியசைத்துத் தொடங்கி வைக்கப்பட்டது. இந்தப் பேரணி ரயில் அருங்காட்சியகம் வழியாக ராமகிருஷ்ணப்பூர் படகுத் துறையில் நிறைவடைந்தது. இதனையடுத்து நடைபெற்ற கலைநிகழ்ச்சிகளில் நாட்டுப்புற பாடல்கள், நடனம் மற்றும் நாடகங்கள் வாயிலாக வாக்களிப்பதன் அவசியம் குறித்தும் தேர்தல் திருவிழாவின் உணர்வு குறித்தும் மக்களிடையே, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. வாக்காளர் விழிப்புணர்வு படகுப் பயணம் உள்ளிட்ட பல்வேறு முன்முயற்சிகளும் இதில் இடம் பெற்றன.

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மக்களை ஈர்க்கும் வகையில், பிரபல அனிமேஷன் கதாபாத்திரங்களான சோட்டா பீம் மற்றும் சுட்கி பங்கேற்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இளம் வாக்காளர்கள் மற்றும் முதல் முறையாக வாக்களிப்பவர்களுக்கு வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இத்தகைய விழிப்புணர்வு பிரச்சாரங்கள் வாக்களிக்க வேண்டியதன் முக்கியத்துவம் குறித்தும் வாக்குச்சாவடிகளைக் கண்டறிவது மற்றும் வாக்குப்பதிவு தினத்தன்று பின்பற்றப்பட வேண்டிய கால அட்டவணை போன்ற முக்கிய விவரங்கள் குறித்தும் வாக்காளர்களுக்கு கற்பிப்பதே இதன் நோக்கமாகும். குறிப்பாக நகர்ப்புற வாக்காளர்கள், பெண்கள், மாற்றுத்திறனாளிகள், இளைஞர்கள் மற்றும் முதல் முறையாக வாக்களிப்பவர்களின் வாக்குப்பதிவு விகிதத்தை அதிகரிக்கச் செய்வது மற்றும் மக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும் இத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேற்கு வங்க மாநிலத்தின் வளமான கலாச்சாரப் பாரம்பரியங்களான காலிகாட் ஓவியங்கள், பட்டச்சித்ரா கலை, சாவ் நடனம், ஜாத்ரா நாடகக்கலை மற்றும் பவுல் நாட்டுப்புற மரபுகள் ஆகியவற்றின் மூலம் வாக்காளர் விழிப்புணர்வு  நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

வாக்களிப்பதை எளிதாக்குவதற்கும், தேர்தல் தொடர்பான நடைமுறைகளில் நேர்மை மற்றும் வெளிப்படைத்தன்மையை வலுப்படுத்துவதற்கும் தேர்தல் ஆணையம் அண்மையில் அறிமுகப்படுத்திய நடவடிக்கைகளையும் இத்தகைய விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மூலம் முன்னிலைப்படுத்தப்படுகிறது. வாக்குச்சாவடி நிலையங்களுக்கு வெளியே அமைக்கப்பட்டுள்ள நடமாடும் வைப்பு வசதிகள், இசிஐநெட், செயலி, 100 சதவீத இணையவழி நேரடி ஒளிபரப்பு, மேம்படுத்தப்பட்ட வாக்காளர் தகவல் சீட்டுகள் மற்றும் இதர வசதிகள் தொடர்பான நடவடிக்கைகளும் இதில் அடங்கும்.

முதல் முறையாக வாக்களிக்க உள்ள இளைஞர்களுக்கு உத்வேகம் அளிக்கும் வகையில், மாநிலம் முழுவதும் உள்ள கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் உள்ள தேர்தல் எழுத்தறிவு மன்றங்கள் வாயிலாக மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.

மாநிலத்தின் கலாச்சாரத்துடன் பொருந்தும் வகையில், பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் இளைஞர்களுக்கு தேர்தல் குறித்த தகவல்களை தெரிவித்து அவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் சமூக ஊடகங்கள் வாயிலாக தேவையான பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படும். அரசுத் துறைகள் மற்றும் பெருநிறுவனங்கள் ஒன்றிணைந்து மேற்கொள்ளப்படும் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள், வாக்குப்பதிவு எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான தேர்தல் ஆணையத்தின் முயற்சிகளுக்கு வலுசேர்ப்பதாக அமையும்.

தேர்தல் தொடர்பான நடைமுறையில் அனைத்துத் தரப்பினரும் அச்சமின்றி எவ்வித சலுகைகளுக்கும் உட்படாமல் முழுமையான விழிப்புணர்வுடனும் பங்கேற்பதை உறுதிசெய்வதே இத்தகைய முயற்சிகளின் நோக்கமாகும். தேர்தல் என்னும் திருவிழா, மேற்கு வங்கத்தின் பெருமை என்ற கருப்பொருளின் அடிப்படையில் முறையான வாக்காளர் கல்வி மற்றும் தேர்தல் பங்கேற்பு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன.

-------

(Release ID: 2245941)

TV/SV/KPG/KR


(வெளியீட்டு அடையாள எண்: 2246110) வருகையாளர் எண்ணிக்கை : 24
இந்த வெளியீட்டை படிக்க: English , Gujarati , Urdu , हिन्दी , Assamese , Bengali , Telugu , Malayalam