ஆயுஷ்
azadi ka amrit mahotsav

மத்திய ஆயுஷ் துறை இணையமைச்சர் திரு பிரதாப்ராவ் ஜாதவ், மும்மை ஜேஜே மருத்துவமனையில் புதுப்பிக்கப்பட்ட யுனானி ஆராய்ச்சி மையத்தை மதிய இணையமைச்சர் திரு பிரதாப் ராவ் ஜாதவ் திறந்து வைத்தார்

இடுகை இடப்பட்ட நாள்: 14 FEB 2026 1:47PM by PIB Chennai

மத்திய ஆயுஷ் துறை இணையமைச்சர் திரு பிரதாப்ராவ் ஜாதவ், மும்பையில் உள்ள பிராந்திய யுனானி மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் புதுப்பிக்கப்பட்ட மையத்தை ஜேஜே மருத்துவமனை வளாகத்தில் திறந்து வைத்தார். மேலும் யுனானி தின கொண்டாட்டங்கள், "யுனானி நடைமுறையில் புதுமை" குறித்த தேசிய மாநாடு ஆகியவற்றுக்கும் அவர் தலைமை வகித்தார். இந்த இரண்டு நாள் நிகழ்ச்சியை மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகத்தின் மத்திய யுனானி மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஏற்பாடு செய்துள்ளது.

நிகழ்ச்சியில் பேசிய திரு பிரதாப்ராவ் ஜாதவ், ஜேஜே மருத்துவமனையில் உள்ள யுனானி ஆராய்ச்சி மையத்தின் இந்த மேம்படுத்தப்பட்ட வசதி, பாரம்பரிய மருத்துவ முறைகளை நோயாளிகளை மையமாகக் கொண்ட சுகாதார கட்டமைப்பின் தூணாக மாற்றும் பிரதமர் திரு நரேந்திர மோடியின் வலுவான உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது என்று கூறினார்.  இந்த முயற்சி, ஆயுஷ் அமைப்புகளை பிரதான சுகாதாரப் பராமரிப்பில் ஒருங்கிணைத்து, அனைவருக்கும் விரிவான நல்வாழ்வை மேம்படுத்துவதற்கான அரசின் தொலைநோக்குப் பார்வையை மேலும் வலுப்படுத்தும் என்றும் அவர் தெரிவித்தார்.

யுனானி மருத்துவம் என்பது வளமான மருத்துவ அனுபவத்தில் வேரூன்றிய ஒரு முறையாகும் என்று அவர் குறிப்பிட்டார். ஆனால் அதில் அறிவியல் ஆதாரங்களை திறம்பட உருவாக்கி வழங்க வேண்டும் என்று கூறினார். புதுமை, சான்றுகள் ஆகியவை யுனானி மருத்துவத்தின் அடுத்த சகாப்தத்தை வடிவமைக்கும் இரண்டு தூண்கள் என்று அவர் தெரிவித்தார்.

ஆயுஷ் அமைச்சகத்தின் செயலாளர் வைத்திய ராஜேஷ் கோடேச்சா,

இந்திய மருத்துவ முறைக்கான தேசிய ஆணையத்தின் தலைவர் டாக்டர் மனீஷா வி. கோதேகர், ஆயுஷ் அமைச்சகத்தின் இணைச் செயலாளர் திருமதி மோனலிசா தாஷ்; ஆயுஷ் அமைச்சகத்தின் ஆலோசகர் (யுனானி) டாக்டர் எம்.ஏ. காஸ்மி, தேசிய யுனானி மருத்துவ நிறுவனத்தின் இயக்குநர் பேராசிரியர் சயத் ஷா ஆலம் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2227999&reg=3&lang=1  

-----

TV/PLM/EA

 


(வெளியீட்டு அடையாள எண்: 2243052) வருகையாளர் எண்ணிக்கை : 30
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , हिन्दी