குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

நேபாளத்தில் நிகழ்ந்த பேருந்து விபத்து குறித்து குடியரசு துணைத்தலைவர் வருத்தம் தெரிவித்துள்ளார்

இடுகை இடப்பட்ட நாள்: 16 MAR 2026 6:33PM by PIB Chennai

நேபாளத்தில் நிகழ்ந்த கோரமான பேருந்து விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த ஏழு பக்தர்கள் உயிரிழந்ததுடன், பலர் காயமடைந்தனர். இது குறித்து குடியரசு  துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துள்ளார்.

 

இந்த துயர சம்பவம் பற்றி அறிந்து தாம் மிகுந்த வருத்தமடைந்ததாகவும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குத் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் சமூக ஊடக எக்ஸ் தள பதிவில் அவர் கூறியுள்ளார்.

 

காயமடைந்தவர்களுக்குத் தேவையான உதவிகளையும், ஆதரவையும் வழங்குமாறு நேபாளத்தில் உள்ள இந்திய தூதரகத்திடமும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமும்  தாம் கேட்டுக் கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், இறந்தவர்களின் உடல்களைத் தாய்நாட்டிற்குக் கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2240888&reg=3&lang=2

 

(Release ID: 2240888)

TV/BR/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2240977) வருகையாளர் எண்ணிக்கை : 15
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Bengali , Gujarati