பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

உத்தரப்பிரதேசத்தின் லக்னோவில் தேசிய நினைவிட அருங்காட்சியக திறப்பு விழாவின் முக்கிய காட்சிகளைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்

प्रविष्टि तिथि: 25 DEC 2025 8:26PM by PIB Chennai

உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் வாழ்க்கையையும் அவரது கொள்கைகளையும் விளக்கி, கௌரவிக்கும் வகையில் ராஷ்ட்ர பிரேர்ண ஸ்தல் எனப்படும் தேசிய நினைவிட அருங்காட்சியக திறப்பு விழா நடைபெற்றது. இதன் திறப்பு விழா காட்சிகளைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார். வாஜ்பாயின் 101-வது பிறந்தநாள் நிகழ்வில் பேசிய பிரதமர், லக்னோ ஒரு புதிய உத்வேகத்திற்கு சாட்சியாக மாறி வருவதாகக் குறிப்பிட்டார். தேசத்திற்கும் உலகிற்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை அவர் தெரிவித்தார். டிசம்பர் 25, நாட்டின் இரண்டு சிறந்த ஆளுமைகளின் பிறந்தநாள் என்பதை எடுத்துரைத்த திரு. மோடி, பாரத ரத்னா அடல் பிஹாரி வாஜ்பாய், பாரத ரத்னா மகாமனா மதன் மோகன் மாளவியா ஆகியோர் இந்தியாவின் அடையாளம் என அவர் குறிப்பிட்டார். இந்த இருவரும் தங்கள் மகத்தான பங்களிப்புகள் மூலம் தேசத்தைக் கட்டியெழுப்புவதில் ஒரு அழியாத முத்திரையை பதித்துள்ளனர் என்பதை பிரதமர் எட்டுத்துரைத்தார்.

இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவுகளில் கூறியிருப்பதாவது:

தேசிய நினைவிட அருங்காட்சியகத்தில் உள்ள அதிநவீன தாமரை வடிவ அருங்காட்சியகம், தன்னலமற்ற தலைமைத்துவத்தையும் நல்லாட்சியின் உணர்வையும் உயிர்ப்பிக்கிறது. இது தலைமுறை தலைமுறையாக நமது தலைவர்களின் கொள்கைகளை, மக்கள் தங்கள் வாழ்க்கையில் உள்வாங்கிக் கொள்ள ஊக்குவிக்கும்."

"தேசிய நினைவிட அருங்காட்சியகத்தில்  உள்ள ஷியாமா பிரசாத் முகர்ஜி, பண்டிட் தீன்தயாள் உபாத்யாய், அடல் பிஹாரி வாஜ்பாய் ஆகியோரின் சிலைகள், நமது முயற்சிகள் தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கு அர்ப்பணிக்கப்பட வேண்டும் என்ற செய்தியை நமக்குத் தெரிவிக்கின்றன."

---

(Release ID: 2208602)

TV/PLM/SH


(रिलीज़ आईडी: 2240904) आगंतुक पटल : 47
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Kannada , English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Assamese , Bengali , Punjabi , Gujarati , Odia , Telugu , Malayalam