கலாசாரத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சாகித்ய அகாடமி விருது 2025

இடுகை இடப்பட்ட நாள்: 16 MAR 2026 4:14PM by PIB Chennai

சாகித்ய அகாடமி தனது வருடாந்திர சாகித்ய அகாடமி விருதுகளை 24 இந்திய மொழிகளில் அறிவித்துள்ளது. 8 கவிதை புத்தகங்கள், 4 நாவல்கள், 6 சிறுகதை புத்தகங்கள், 2 கட்டுரைகள், 1 இலக்கிய விமர்சனம், 1 சுயசரிதை மற்றும் 2 நினைவுக் குறிப்புகள் ஆகியவை சாகித்ய அகாடமி விருதுகள் 2025- ஐ வென்றுள்ளன.

ஒவ்வொரு ஆண்டும், சாகித்ய அகாடமி ஒரு நிறுவப்பட்ட செயல்முறை மூலம் அங்கீகரிக்கப்பட்ட 24 மொழிகளில் விருதுகளை வழங்குகிறது. சாகித்ய அகாடமி விருது 2025 க்கான செயல்முறை ஜனவரி 2025-ல் தொடங்கியது.

24 இந்திய மொழிகளில் புகழ்பெற்ற நடுவர் மன்ற உறுப்பினர்களால் பரிந்துரைக்கப்பட்ட இந்த விருதுகளுக்கு சாகித்ய அகாடமியின் தகுதிவாய்ந்த ஆணையம் ஒப்புதல் அளித்தது.

தமிழில் சா. தமிழ் செல்வன் எழுதிய தமிழ் சிறுகதைகளின் தடங்கள் என்ற நூலுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

டாக்டர் அரிமளம் எஸ் பத்மநாபன், டாக்டர் எஸ் துர்கா, டாக்டர் எஸ் ராஜேந்திரன் ஆகியோர் அடங்கிய குழு விருதுகளை தேர்வு செய்தது. 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2240704&reg=3&lang=1

***

TV/PKV/KR


(வெளியீட்டு அடையாள எண்: 2240829) வருகையாளர் எண்ணிக்கை : 22
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Marathi , Gujarati , Odia , Telugu , Kannada