பெருநிறுவனங்கள் விவகாரங்கள் அமைச்சகம்
பொறுப்பான வணிக நடைமுறை குறித்த அமைச்சகங்களுக்கு இடையேயான ஆலோசனைக் கூட்டத்தை இந்திய பெருநிறுவன விவகார நிறுவனம் நடத்தியது
प्रविष्टि तिथि:
15 MAR 2026 1:07PM by PIB Chennai
மத்திய அரசின் பெருநிறுவன விவகார அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்திய பெருநிறுவன விவகார நிறுவனம் (IICA), பொறுப்பான வணிக நடைமுறை குறித்த அமைச்சகங்களுக்கு இடையேயான ஆலோசனைக் கூட்டத்தை அண்மையில் புது தில்லியில் நடத்தியது.
இந்தியாவில் பொறுப்பான வணிக நடைமுறை, சிறந்த நிர்வாகம் குறித்த கொள்கை, நிறுவன ஒருங்கிணைப்பை வலுப்படுத்துதல் போன்றவை குறித்து இந்த ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
இந்திய நிறுவன விவகார நிறுவனத்தின் தலைமை இயக்குநர் திரு ஞானேஷ்வர் குமார் சிங் தலைமையில் இந்தப் பயிலரங்கம் தொடங்கியது. உலகளாவிய விநியோகச் சங்கிலிகளில் பொறுப்பான வணிக நடைமுறையின் முக்கியத்துவத்தை அவர் எடுத்துரைத்தார். பொறுப்பான வணிக நடைமுறைகள், பொருளாதார போட்டித்தன்மை, நிலையான வளர்ச்சி, சர்வதேச வர்த்தக ஒருங்கிணைப்பு ஆகியவற்றை வலுப்படுத்தும் என்று திரு சிங் குறிப்பிட்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2240319®=3&lang=1
***
TV/PLM/RJ
(रिलीज़ आईडी: 2240410)
आगंतुक पटल : 64