உள்துறை அமைச்சகம்
2027-ம் ஆண்டுக்கான பத்ம விருதுகளுக்கான பரிந்துரைகள் தொடங்கியது
இடுகை இடப்பட்ட நாள்:
15 MAR 2026 5:04PM by PIB Chennai
2027-ம் ஆண்டு குடியரசு தினத்தையொட்டி அறிவிக்கப்படும் பத்ம விருதுகள்-2027-க்கான விண்ணப்பங்கள் /பரிந்துரைகள் இன்று (2026 மார்ச் 15) தொடங்கியுள்ளன. பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள்/பரிந்துரைகளை சமர்ப்பிக்கக் கடைசி தேதி 2026 ஜூலை 31 ஆகும். பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள்/பரிந்துரைகள் தேசிய விருதுகள் தளமான https://awards.gov.in என்ற இணையதளத்தின் மூலமாக மட்டுமே பெறப்படும்.
பத்ம விருதுகள், அதாவது பத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்மஸ்ரீ, ஆகியவை நாட்டின் மிக உயர்ந்த சிவில் விருதுகளில் ஒன்றாகும். 1954-ம் ஆண்டு நிறுவப்பட்ட இந்த விருதுகள் ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தையொட்டி அறிவிக்கப்படுகின்றன. இந்த விருது பல துறைகளில் சிறப்பான பணிகளை அங்கீகரிக்கிறது. கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூகப் பணி, அறிவியல், பொறியியல், பொது விவகாரங்கள், குடிமைப் பணி, வர்த்தகம், தொழில் போன்ற அனைத்துத் துறைகளிலும சிறந்த சாதனைகள்/சேவைக்காக இந்த விருது வழங்கப்படுகிறது. இனம், தொழில், பதவி அல்லது பாலின வேறுபாடு இல்லாமல் அனைத்து நபர்களும் இந்த விருதுகளுக்குத் தகுதியுடையவர்கள். மருத்துவர்கள், விஞ்ஞானிகள் தவிர, பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரிபவர்கள், அரசு ஊழியர்கள் பத்ம விருதுகளுக்குத் தகுதியற்றவர்கள்.
பத்ம விருதுகளை மக்கள் பத்ம விருதுகளாக மாற்ற அரசு உறுதிபூண்டுள்ளது. எனவே தகுதியுள்ள அனைவரும் சுய பரிந்துரை விண்ணப்பங்கள்/பரிந்துரைகளைச் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இது தொடர்பான விவரங்கள் உள்துறை அமைச்சகத்தின் இணையதளமான https://mha.gov.in -ல், விருதுகள் மற்றும் பதக்கங்கள் என்ற தலைப்பில் உள்ள பகுதியிலும், பத்ம விருதுகள் தளமான https://padmaawards.gov.in -லும் கிடைக்கின்றன. இந்த விருதுகள் தொடர்பான சட்டங்கள் மற்றும் விதிகள் https://padmaawards.gov.in/AboutAwards.aspx என்ற இணையதள இணைப்பில் உள்ளன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2240371®=3&lang=1
***
TV/PLM/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2240399)
வருகையாளர் எண்ணிக்கை : 29
இந்த வெளியீட்டை படிக்க:
Bengali
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam