ஆயுஷ்
azadi ka amrit mahotsav

சர்வதேச யோகா தினத்திற்கான 100 நாள் கவுண்டவுன் தொடக்கம்: 'யோகா மகோத்சவம்–2026' அமைச்சரால் துவக்கி வைப்பு

இடுகை இடப்பட்ட நாள்: 13 MAR 2026 6:24PM by PIB Chennai

12-வது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, அதற்கான 100 நாள் கவுண்டவுன் நிகழ்வான 'யோகா மகோத்சவம்–2026' புதுதில்லியில் இன்று கோலாகலமாகத் தொடங்கியது. மத்திய ஆயுஷ் துறை அமைச்சர் பிரதாப்ராவ் ஜாதவ் இந்நிகழ்வைத் தொடங்கி வைத்து, பல்வேறு உடல்நல பாதிப்புகள் மற்றும் அனைத்து வயதினருக்கான '10 யோகா நெறிமுறைகளை' வெளியிட்டார்.

 

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், பிரதமர் நரேந்திர மோடியின் வழிகாட்டுதலால் கடந்த 11 ஆண்டுகளில் சர்வதேச யோகா தினம் ஒரு உலகளாவிய ஆரோக்கியத் திருவிழாவாக மாறியுள்ளதாகக் குறிப்பிட்டார். குறிப்பாக, விமானப் பயணத்தின் போது ஏற்படும் அழுத்தத்தைக் குறைக்கவும், ரத்த ஓட்டத்தைச் சீராக்கவும் உதவும் 'விமானப் பயணத்திற்கான யோகா' என்ற 5 நிமிடப் பயிற்சி முறையையும் அவர் அறிமுகப்படுத்தினார்.

 

இந்த ஆண்டு யோகா தினத்தை முன்னிட்டு, பொதுமக்கள் தினமும் யோகா பயில உதவும் 'யோகா 365' என்ற பிரச்சாரமும் தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக 1800-315-7008 என்ற கட்டணமில்லா எண்ணும் அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும், யோகா செய்யும் போது உடல் நிலையைச் சரியாக வைத்துள்ளோமா என்பதைக் கண்டறிய செயற்கை நுண்ணறிவு  சார்ந்த கருவியையும் ஆயுஷ் அமைச்சகம் உருவாக்கி வருவதாகத் தெரிவிக்கப்பட்டது. சுமார் 1,500 வல்லுநர்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்வு, யோகாவை ஒரு உலகளாவிய இயக்கமாக முன்னெடுத்துச் செல்லும் இந்தியாவின் முயற்சியை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

 

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:

 

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2239779&reg=3&lang=1

 

செய்தி வெளியீட்டு எண்:2239779

****

TV/VK/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2240006) வருகையாளர் எண்ணிக்கை : 5
இந்த வெளியீட்டை படிக்க: English , Marathi , हिन्दी , Malayalam