மக்களவை செயலகம்
கொள்கை விவாதங்கள், புதுமை மற்றும் சர்வதேச ஒத்துழைப்புக்கான ஒரு முக்கிய தளமாக என்எக்ஸ்டி 2026 உச்சிமாநாடு உருவாகி வருகிறது: மக்களவைத் தலைவர்
இடுகை இடப்பட்ட நாள்:
13 MAR 2026 6:09PM by PIB Chennai
புதுதில்லியில் நடைபெற்ற என்எக்ஸ்டி உச்சிமாநாடு 2026 இல் கலந்து கொண்ட 30க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், தொழில்துறைத் தலைவர்கள் மற்றும் சிந்தனைத் தலைவர்கள் அடங்கிய குழு, மக்களவைத் தலைவர் திரு ஓம் பிர்லாவை இன்று நாடாளுமன்ற வளாகத்தில் சந்தித்தது. இந்த நிகழ்வில் பேசிய திரு பிர்லா, பல்வேறு ஜனநாயக நாடுகளைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பிரமுகர்களை நாடாளுமன்ற வளாகத்தில் வரவேற்றதில் மகிழ்ச்சி தெரிவித்ததுடன், உலகளாவிய நாடாளுமன்ற உரையாடலின் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார்.
கொள்கை விவாதங்கள், புதுமை மற்றும் சர்வதேச ஒத்துழைப்புக்கான ஒரு முக்கியமான தளமாக இந்த உச்சிமாநாடு உருவாக்கி வருவதாக திரு பிர்லா குறிப்பிட்டார். இந்த மாநாடு உலகெங்கிலும் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் சிந்தனைத் தலைவர்களை ஒன்றிணைத்து சமகால உலகளாவிய சவால்கள் மற்றும் வாய்ப்புகள் குறித்து ஆலோசிப்பதாக அவர் கூறினார்.
கடந்த பத்தாண்டுகளில் உள்ளடக்கிய வளர்ச்சி, டிஜிட்டல் கண்டுபிடிப்பு மற்றும் நல்லாட்சி ஆகியவற்றில் இந்தியாவின் முன்னேற்றத்தையும் திரு பிர்லா அடிக்கோடிட்டுக் காட்டினார். தொழில்நுட்பம் சார்ந்த நிர்வாகம், நேரடி பலன் பரிவர்த்தனை வழிமுறைகள் மற்றும் டிஜிட்டல் தளங்கள் பொது நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வை கணிசமாக வலுப்படுத்தியுள்ளன என்று அவர் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2239759®=3&lang=1
(Release ID: 2239759)
****
TV/BR/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2240004)
வருகையாளர் எண்ணிக்கை : 6