உள்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான ஆன்லைன் குற்றங்கள் குறித்த தேசிய கருத்தரங்கு புதுதில்லியில் நடைபெற்றது

இடுகை இடப்பட்ட நாள்: 13 MAR 2026 3:25PM by PIB Chennai

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான  ஆன்லைன் குற்றங்கள் தொடர்பான தேசியக் கருத்தரங்கை மத்திய உள்துறை செயலாளர் திரு கோவிந்த் மோகன் புதுதில்லியில் இன்று (13.03.2026) தொடங்கி வைத்தார். இந்தக் கருத்தரங்கை மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் இந்திய சைபர் குற்றம் தொடர்பான ஒருங்கிணைப்பு மையம் ஏற்பாடு செய்துள்ளது.

இந்தக் கருத்தரங்கில் பெண்கள் மற்றும் குழந்தைகளை இலக்காக வைத்து நடத்தப்படும் ஆன்லைன் குற்றச்செயல்களுக்கு எதிரான நடவடிக்கைகளை திறம்பட மேற்கொள்வதற்கும் பாதுகாப்பு சார்ந்த அம்சங்களை வலுப்படுத்துவது குறித்தும் துறை சார்ந்த வல்லுநர்கள் விரிவாக விவாதிக்க உள்ளனர்.

பிரதமர் திரு நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா ஆகியோரின் வழிகாட்டுதலின் பேரில் நாடு முழுவதும் பெண்கள் குழந்தைகளுக்கான  கண்ணியமான டிஜிட்டல் சூழல் அமைப்பை உருவாக்குவதற்கும் பாதுகாப்பு சார்ந்த நடவடிக்கைகளை உறுதி செய்வதற்கும் தேவையான ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதில் மத்திய அரசு உறுதியுடன் உள்ளது.

இக்கருத்தரங்கில் பேசிய உள்துறைச் செயலாளர் திரு கோவிந்த் மோகன், ஆன்லைன் குற்றச்செயலில்  அதிகரித்து வருவதாகவும் இதனை திறம்பட எதிர்கொண்டு தடுப்பதற்கான டிஜிட்டல் சூழல் அமைப்புகளை வலுப்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்தும் வலியுறுத்தினார்.

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் ஆன்லைன் குற்றச்செயல்களைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை திறம்பட மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். ஆன்லைன் குற்றங்கள் தொடர்பான விசாரணையைக் குறித்த காலத்திற்குள் முடிக்கவும் பாதிக்கப்பட்ட நபர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்கவும், விதிமுறைகளை மீறுவோர் மீது உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்குத் தேவையான கட்டமைப்புகளை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் வலுப்படுத்த வேண்டும் என்று மத்திய உள்துறை செயலாளர் திரு கோவிந்த் மோகன் தெரிவித்துள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2239561&reg=3&lang=1

***

AD/SV/KPG/RK


(வெளியீட்டு அடையாள எண்: 2239734) வருகையாளர் எண்ணிக்கை : 17
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Marathi , Assamese , Gujarati , Kannada