பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நியூயார்க்கில் நடைபெற்ற பெண்கள் நிலை குறித்த ஆணையத்தின் 70-வது அமர்வில் மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை இணையமைச்சர் திருமதி சாவித்திரி தாக்கூர் பங்கேற்றார்

இடுகை இடப்பட்ட நாள்: 13 MAR 2026 11:34AM by PIB Chennai

நியூயார்க்கில் உள்ள ஐநா தலைமையகத்தில் 2026 மார்ச் 12 அன்று நடைபெற்ற பெண்கள் நிலை குறித்த ஆணையத்தின் 70-வது அமர்வில் மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை இணையமைச்சர் திருமதி சாவித்திரி தாக்கூர் பங்கேற்றார். “மகளிர் தலைமையிலான மேம்பாடு மற்றும் வளரும் நாடுகளின் ஒத்துழைப்பு – ஐபிஎஸ்ஏ (இந்தியா, பிரேசில், தென்னாப்பிரிக்கா) நிதியத்தின் மூலமான வெற்றிக் கதைகள்” என்ற தலைப்பில் அவர் உரையாற்றினார்.

பல்வேறு நாடுகளின் மூத்த அமைச்சர்களும், சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகளும் இந்த அமர்வில் பங்கேற்றனர். இந்த நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர், உலகளாவிய தெற்கு நாடுகளின் ஒத்துழைப்பு பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதிலும், நீடித்த மேம்பாட்டிலும் எவ்வாறு பங்களிப்பு செய்கிறது என்பதை எடுத்துரைத்தார். 2004-ல் நிறுவப்பட்ட ஐபிஎஸ்ஏ (இந்தியா, பிரேசில், தென்னாப்பிரிக்கா) நிதியம் என்ற கூட்டு முன்முயற்சி சுமார் 40 நாடுகளில் 50-க்கும் அதிகமான வளர்ச்சி உதவி திட்டங்களுக்கு ஆதரவு அளித்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

சமூகத்தில் பெண்களின் பன்முக பங்களிப்பை அங்கீகரிக்கும் இந்தியா, தேசிய முன்முயற்சிகள் மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு திட்டங்கள் மூலம் பெண்களின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு தொடர்ந்து முன்னுரிமை அளிக்கிறது என்று அமைச்சர் திருமதி சாவித்திரி தாக்கூர் கூறினார். பெண்கள் தலைமையிலான வளர்ச்சி என்பதில் இந்தியாவின் உள்நாட்டு உறுதிப்பாட்டை எடுத்துரைத்த அவர், கல்வி, திறன்கள், டிஜிட்டல் முறையில் அதிகாரமளித்தல், தொழில்முனைவு போன்றவற்றில் பெண்களின் பங்களிப்பை வலுப்படுத்த பல முன்முயற்சிகளை இந்திய அரசு மேற்கொண்டிருப்பதாக கூறினார். மத்திய அரசின் 2025-26-க்கான பட்ஜெட்டில் சுமார் 60 பில்லியன் (5.01 லட்சம் கோடி ரூபாய்) பாலின அடிப்படையிலான திட்டங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது பாலின சமத்துவம் மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியில் அரசின் தொடரும் கவனத்தைப் பிரதிபலிக்கிறது என்று அவர் குறிப்பிட்டார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2239412&reg=3&lang=1

***

AD/SMB/RJ/RK


(வெளியீட்டு அடையாள எண்: 2239549) வருகையாளர் எண்ணிக்கை : 8
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Gujarati