நிதி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

வங்கிசாரா நிதி நிறுவனங்களின் வளர்ச்சி குறித்து மத்திய நிதி அமைச்சகச் செயலாளர் ஆலோசனை

இடுகை இடப்பட்ட நாள்: 12 MAR 2026 8:17PM by PIB Chennai

மத்திய நிதி அமைச்சகத்தின் நிதிச் சேவைகள் துறை செயலாளர் திரு. எம். நாகராஜு தலைமையில், முக்கிய வங்கிசாரா நிதி நிறுவனங்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று புதுதில்லியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் இந்திய ரிசர்வ் வங்கி, வருவாய்த்துறை மற்றும் இந்திய தனித்துவ அடையாள ஆணையம்  ஆகியவற்றின் மூத்த அதிகாரிகள் மற்றும் எப்.ஐ.டி.சி, எம்.ஃபின்  போன்ற தன்னாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

 

வங்கிசாரா நிதி நிறுவனங்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து இக்கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது. கடன் வசதி குறைவாக உள்ள பகுதிகளுக்கும், புதிதாகக் கடன் பெறுவோரின் தேவைகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கும் வகையில், இந்த நிறுவனங்கள் நிதி ரீதியாக வலுவாகவும் சுறுசுறுப்பாகவும் செயல்பட வேண்டும் என்று செயலாளர் வலியுறுத்தினார்.

 

மேலும், கே.ஒய்.சி  நடைமுறைகளைத் தடையின்றி மேற்கொள்வது குறித்து நிறுவனங்களுக்குத் தெளிவுபடுத்த, இந்திய தனித்துவ அடையாள எண் மற்றும் இந்தியத் தேசியக் பணப் பரிமாற்ற கழகத்துடன் இணைந்து ஒரு பயிலரங்கை நடத்த அவர் அறிவுறுத்தினார். இந்தத் துறையைப் பலப்படுத்துவதற்கான சீர்திருத்தக் கட்டமைப்பை உருவாக்கிச் செயல்படுத்துமாறு தன்னாட்சி அமைப்புகளை அவர் கேட்டுக்கொண்டார். இத்தகைய தொடர்ச்சியான கலந்தாலோசனைகள், நாட்டின் பொருளாதாரக் கடன் தேவைகளைப் பூர்த்தி செய்ய நிதி நிறுவனங்களுக்குப் பெரும் உதவியாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டது.

 

 

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:

 

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2239207&reg=3&lang=1

 

செய்தி வெளியீட்டு எண்:2239207

****

TV/VK/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2239309) வருகையாளர் எண்ணிக்கை : 10
இந்த வெளியீட்டை படிக்க: English , हिन्दी , Gujarati